மதுரை மாவட்டம் உசிலம்படடி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்தவர் கருப்பையா .  டீக்கடை நடத்தி வந்தார். அவருடைய மனைவி கீதா. இவர்களுக்கு பிரதீபா , , ஹேமலதா  என்ற 2 மகள்கள் இருந்தனர்.

இந்த நிலையில் மனைவி கீதாவுக்கு வேறொருவருடன் தொடர்பு இருந்துள்ளது. கருப்பையா டீ கடைக்கும், குழந்தைகள் பள்ளிக்கும் சென்ற பிறகு மனைவி கீதா தனது காதலனை விட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.

இதனை  கருப்பையா கண்டித்துள்ளார்.இதையடுத்து சமீப காலமாக கணவன்-மனைவி இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. பின்னர் இந்த விவகாரம் போலீஸ் நிலையம் வரை சென்று, உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து கீதா தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். கருப்பையா தனது 2 மகள்களுடன் தொட்டப்பநாயக்கனூரில் வசித்து வந்தார். மனைவியின் கள்ளத் தொடர்பு, தன்னையும் மகள்களையும் பிரிந்து சென்ற மனைவி என மன உளைச்சலில் இருந்த கருப்பையா, நேற்று தனது மகள்களுடன் டீக்கடையில் இருந்தபோது சிலிண்டரை வெடிக்கச் செய்ததாக கூறப்படுகிறது.

இதில் கருப்பையா மற்றும்அ அவரது இரு மகள்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மனைவியின் கள்ளத் தொடர்பால் டீ கடை உரிமையாளர் மகள்களுடன் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு உசிலம்பட்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது