ஒரு ஆண்டுக்கு முன் கணவனை தவிக்க விட்டு ஓடிய மனைவியின் கள்ளக்காதலனை கொடூரமாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் சலவன்பேட்டை கச்சேரி ஸ்கூல் தெருவை சேர்ந்தவர் கோபி (38), கார் டிரைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சரவணன் (35) என்பவருடைய மனைவி ரமணிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஊரை விட்டு ஓடிச் சென்றனர். ரமணியை கோபி பெங்களூருக்கு அழைத்துச் சென்று குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனால் சரவணன் குடும்பத்தில் பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. மேலும் மனைவியை அழைத்துச் சென்றதால் கோபி மீது சரவணன் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் உறவினர் ஒருவரின் துக்கநிகழ்ச்சிக்காக கோபி நேற்று முன்தினம் வேலூர் வந்தார். இதையறிந்த சரவணன் அவர் மீது கொலைவெறியில் இருந்தார். அப்போது தனியாக நின்றிக்கொண்டிருந்த கோபியை 3 பேர் கும்பல் சரமாரியாக கத்தியால் குத்தினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடைபெற்றது தெரியவந்தது.  இந்த சம்பவத்தில் சரவணனுக்கு 2 பேர் உதவியாக இருந்தது தெரியவருகிறது. அவர்களையும், சரவணனையும் போலீசார் தேடி வருகின்றனர்.