Asianet News TamilAsianet News Tamil

அதிர்ச்சி சம்பவம்... வாலிபரை கொடூரமாக கொன்று கோவிலில் புதைப்பு.. கள்ளக்காதலியுடன் அர்ச்சகர் அதிரடி கைது

பண்ருட்டியில் கொலை செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அர்ச்சகர் மற்றும் கள்ளக்காதலியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

illegal love murder issue...priest arrest
Author
Cuddalore, First Published Aug 22, 2020, 4:42 PM IST

பண்ருட்டியில் கொலை செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அர்ச்சகர் மற்றும் கள்ளக்காதலியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வி.ஆண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் மஞ்சுளா(29). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மஞ்சுளா தனியாக வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் மஞ்சுளாவுக்கும், பண்ருட்டியில் உள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வந்த பணிக்கன்குப்பத்தை சேர்ந்த கண்ணதாசன்(34) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. 

illegal love murder issue...priest arrest

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே குடும்பம் நடத்தி வந்தனர். இதனிடையே,  கடந்த 12-ம் தேதி கடைக்கு வேலைக்கு சென்ற கண்ணதாசன், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக மஞ்சுளா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

அதில், மஞ்சுளா, அதே ஊரில் உள்ள வேணுகோபாலசாமி கோவிலில் அர்ச்சகரும், பிரபல ஜோதிடருமான கோபிநாத்(52) என்பவரது வீட்டில் வேலை பார்த்து வந்தார். மஞ்சுளா வேலை முடித்து வீட்டுக்கு வந்த பிறகும், கோபிநாத்துடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதை கண்ணதாசன் கண்டித்துள்ளார். இதனால் கண்ணதாசனை தீர்த்துக்கட்ட மஞ்சுளாவும், கோபிநாத்தும் முடிவு செய்தனர். 

illegal love murder issue...priest arrest

அதன்படி கடந்த 12-ம் தேதி கண்ணதாசனை சமாதானப்படுத்துவதற்காக கோபிநாத் அவரை வேணுகோபாலசாமி கோவிலுக்கு அழைத்து வந்தார். அப்போது அங்கிருந்த மஞ்சுளா மற்றும் சிலர் சேர்ந்து இரும்பு கம்பியால் கண்ணதாசனை சரமாரியாக அடித்து கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் கோவிலில் பூஜை பொருட்கள் வைக்கப்படும் அறையில் பள்ளம் தோண்டி கண்ணதாசனின் உடலை புதைத்தனர். தன் மீது யாருக்கும் சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காக மஞ்சுளா போலீசில் புகார் செய்து நாடகமாடியுள்ளார். இதுதொடர்பாக கோபிநாத், மஞ்சுளாவை போலீசார் கைது செய்தனர். மேலும், கோவில் அறையில் உள்ள பகுதியில் உடல் எடுக்கும் பணி துவங்கியது. மூன்றுக்கு 3 அடி அகல பகுதியில் 6 அடி ஆழம் பள்ளத்தில் நிற்க வைத்த நிலையில் பிணத்தை புதைத்தது தெரிந்தது. பிரேதத்தை விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios