வேலூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பெற்ற குழந்தையை கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாயே ஜல்லி கரண்டியால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த நளினி - சிவக்குமார் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நளினி தனது ஒன்றரை வயது பெண் குழந்தையுடன் தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். இதையடுத்து அப்போது முரளி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதால், வாணியம்பாடி அருகே தனியாக வீடு எடுத்து இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

 

இதனிடையே உடல்நலம் சரியில்லை எனக் கூறி தனது ஒன்றரை வயது மகளை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு நளினி அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் குழந்தையின் உடலில் காயம் இருந்ததால் சந்தேகமடைந்த மருத்துவர் பிரேத பரிசோதனை செய்த பின்பு தான் குழந்தையின் உடலை கொடுக்க முடியும் என்று கூறினர். அதேசமயம் நளினியின் தந்தையும் குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். 

இதனையடுத்து போலீசார் நளினி, முரளியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் குழந்தையை ஜல்லி கரண்டி மற்றும் இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றதாக போலீசாரிடம் வாக்குமூலத்தின் தெரிவித்தனர். இதனையடுத்து இருவரையும் திட்டமிட்டு கொலை செய்தல் பிரிவில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.