கோலம் போட வெளியில் வந்த பள்ளி தலைமை ஆசிரியர் மனைவி கொலையில் விஜய் ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் அதிரடியக கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பக அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திருவள்ளுர் நகரை சேர்ந்தவர் ஆனந்தஜோதி. இவர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சித்ரா (40). இவர் வீட்டு வாசலில் கோலம் போடுவதற்காக கடந்த 18 ஆம் தேதி அதிகாலையில் வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சித்ராவை பயங்கர ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சித்ராவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வந்தனர். மேலும், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில், சித்ராவை தாக்கிவிட்டு ஓடிய நபர் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சட்டநாதபுரம் கணபதி நகரை சேர்ந்த தாஜூதீன் மகன் சையது (29)சித்ராவை கொலை செய்தது தெரிவந்தது. இதனையடுத்து, போலீசார் சையது ரியாசை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட சித்ராவின் வீட்டில் வாடகைக்கு வசித்த பெண்ணுக்கும் சையதுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால், சையது ரியாஸ் அடிக்கடி வந்து அந்த பெண்ணை சந்தித்து சென்றுள்ளார். இதனை வீட்டு உரிமையாளர் சித்ரா இந்த பெண்ணையும், சையது ரியாஸை  கண்டித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த ரியாஸ், சம்பவத்தன்று காலை சித்ரா கோலம் போட வீட்டில் இருந்து வெளியில் வந்தபோது இரும்பு பைப்பால் தலையில் கடுமையாக தாக்கி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து சையது ரிகாசின் கள்ளக்காதலியையும் போலீசால் காவல் நிலையத்திற்கு  அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சையது ரியாஸ் விஜய் ரசிகர் மன்ற நாகை மாவட்ட செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.