நான் இருக்கும் போதே வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்து உல்லாசமாக இருந்து வந்த பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை சேர்ந்தவர் யசோதா ராணி (42). இவருக்கு கணவரும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். இவர் புதுபெருங்களத்தூர் பாரதி நகர் பகுதியில் தையல் கடை நடத்தி வந்தார். இவருக்கும், கிழக்கு தாம்பரம் கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் (45) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருவரும் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று மதியம் தையல் கடையில் இருந்த யசோதா ராணியிடம், செல்வக்குமார் பேசி கொண்டிருந்தார். திடீரென இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வக்குமார் கடையில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து திடீரென்று யசோதா ராணியின் கழுத்தில் குத்திவிட்டு அங்கிருந்து இருசக்கரத்தில் தப்பிச் சென்றுவிட்டார். இதில் படுகாயம் அடைந்த யாசோதா ராணி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இது தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் பெருங்களத்தூர் ரோஜா தோட்டம் அருகே செல்வக்குமாரின் இருசக்கர வாகனம் தனியாக நின்றுக்கொண்டிருந்தது. அந்த பகுதியில் போலீசார் தேடியபோது, பைபாஸ் சாலை சர்வீஸ் சாலை அருகே உள்ள பாலத்தின் கீழே அமர்ந்து இருந்த செல்வக்குமாரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில், நான் இருக்கும் போதே வேறு ஒருவருடன் கள்ளக்காதலி தொடர்பு இருந்து அடிக்கடி செல்போனில் பேசி வந்ததால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.