மேட்டூர் அருகே பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை அடித்துக்கொலை செய்ததாக கூறப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக மனைவியே கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த ஜலகண்டபுரம் ஆவடத்தூரை சேர்ந்தவர் படவெட்டி (40) கூலி தொழிலாளி. இவரது மனைவி நிலா வயது (35). இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். நிலா தனது தாய் வீட்டில் விசைத்தறி அமைத்து நெசவுத் தொழில் செய்து வருகிறார். கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட குடும்ப கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகள் பிரிந்திருந்தனர். 

கடந்த 20 நாட்களுக்கு முன்பு நிலா மாமியார் வீட்டிற்குச் சென்று தனது கணவரை சேர்ந்து வாழலாம் என கூறி அழைத்து வந்தாராம். இந்நிலையில், நேற்று நள்ளிரவு படவெட்டி தலையில் கல்லால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இது தொடர்பாக ஜலகண்டபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க;-  பிடிச்சவன் கிட்ட எல்லாம் படுக்கையை விரித்த ஆசிரியை... உல்லாசத்திற்கு தடையாக இருந்த கணவரை கொல்ல முயற்சி..!

முதற்கட்ட விசாரணையில் படவெட்டி மதுபோதையில் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதனால் அவரது மகளே கிரைண்டர் கல்லால் தாக்கி கொலை செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், திடீர் திருப்பமாக கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவியே கணவனை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக மனைவி கூறுகையில்;- ரங்கசாமி உடனான கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரியவந்தது. இதனையடுத்து, கள்ளக்காதலை கைவிடுமாறு கண்டித்துள்ளார். இதனால், ஆத்தரமடைந்த மனைவி கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.