மதுராந்தகம் அருகே இளைஞருடன் கள்ளக்காதல் வைத்திருந்த மனைவி கொடூரமாக எரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சிை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கம் அடுத்த இரும்புலி கிராமம் மேட்டு காலனியை சேர்ந்தவர் பார்த்திபன் (30) இவர் கூலிதொழிலாளி. இவரின் மனைவி தீபா (27). இவர் மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு 7 வயதில் பவித்ரா என்ற மகள் உள்ளார். 

இந்நிலையில், தீபாவுக்கு அதே கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞருடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் கணவர் பார்த்திபனுக்கு தெரியவந்ததும் மனைவியை கண்டித்ததுடன் கள்ளத்தொடர்வை கைவிட்டுவிடுமாறு எச்சரித்துள்ளார். இருப்பினும் தீபா கள்ளத்தொடர்பை விடவில்லை. அதனால், தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்த சம்பத்தன்று காலை தம்பதி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பார்த்திபன் வீட்டில் இருந்து மண்ணெண்ணெய்யை எடுத்து வந்து மனைவி தீபா உடல் மீது ஊற்றி தீ வைத்துவிட்டார். இதில், உடல்கருகியதால் தீபா அலறிதுடித்துள்ளார். இதை கண்ட குழந்தை ஓடிச்சென்று கட்டிப்பிடித்துள்ளது. இதில், குழந்தைக்கும் காயம் ஏற்பட்டது. இதனடிடையே, அவர்களது கதறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டுவந்தனர். இதனால், கணவர் பார்த்திபன் அங்கிருந்து தப்பித்துவிட்டார். இதனிடையே, தீபா பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விவகாரம் தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீபா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த குழந்தைக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள கணவரை தேடி வருகின்றனர்.