கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்த போது நேரில் பார்த்த கணவரை சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சந்திராபுரத்தை சேர்ந்தவர் நாகராஜ் (37) திருமணமான சில ஆண்டுகளில் மனைவியை உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து, அமுதா என்பவரை 2வது திருமணம் செய்துகொண்டனர். இருவரும், கோவை மதுக்கரையில் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தனர். அதே நிறுவனத்தில் ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த சங்கர் (32) என்பவரும் வேலை பார்த்து வந்த போது பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி தனிமையில் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் கணவர் ராகராஜிக்கு தெரியவந்ததால் அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில், நேற்று முன்தினம் நாகராஜ் வீட்டின் அருகே உயிரிழந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வடிரைந்த போலீசார் நகராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் சங்கரை பிடித்து நடத்திய விசாரணை நடத்தினர். அதில், அமுதா உதவியுடன் நாகராஜை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக போலீசார் கூறுகையில்;- சங்கர் - அமுதா நேற்று முன்தினம் சங்கர் அறையில்  உல்லாசமாக இருந்துள்ளனர். நள்ளிரவில் வந்த நாகராஜ் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு நாகராஜை கீழே தள்ளிய சங்கர் சுத்தியலால் தலையில் அடித்துள்ளார். அமுதா கால்களை பிடித்துக்கொள்ள, அவரது நெஞ்சில் சுத்தியலால் பலமாக அடித்துள்ளார். பின், கழுத்தை நெரித்துள்ளனர். இதில், நாகராஜ் உயிரிழந்தார் என போலீசார் கூறியுள்ளனர்.