கணவனை கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தேனி அருகே தர்மபுரி பகுதியை சேர்ந்தவர் முத்துக்காளை(42). இவரது மனைவி கலையரசி (35) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவரும் கொத்தனார் வேலைக்கு சென்று வந்தனர். அப்போது அங்கு கான்கிரீட் கலவை இயந்திரம் வைத்திருக்கும் சேதுபதிக்கும்(32) கலையரசி இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரிய வர மனைவியை கண்டித்துள்ளார். இருப்பினும் அவர்களது கள்ளக்காதல் தொடர்ந்துள்ளது. இருவரும் செல்போனில் அடிக்கடி பேசியுள்ளனர். இதனால், கலையரசிடம் இருந்த செல்போனை முத்துக்காளை வாங்கி வைத்துக் கொண்டார். இதில், ஆத்திரமடைந்த அவர் கணவனை கொல்ல கள்ளக்காதலனுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டியுள்ளார். 

கடந்த 2ம் தேதி சீட்டு பணம் கட்ட வேண்டும் எனக்கூறி முத்துக்காளையை கலையரசி காமாட்சிபுரம் அருகே உள்ள தோட்டத்து கிணற்றுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சேதுபதி மற்றும் மேலப்பட்டியை சேர்ந்த கணசேன் (34) காத்திருந்தனர். பின்னர், 3 பேரும் சேர்ந்து முத்துக்காளையை அடித்து கொன்று உடலை கிணற்றில் வீசினர். 

இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  முத்துக்காளையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து, தம்பி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலைத்தில் புகார் அளித்தார். பின்னர், கரையரசியிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதியதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, மனைவி கலையரசி, கள்ளக்காதலன் சேதுபதி கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள கணேசனை போலீசார் தேடி வருகின்றனர். மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.