கிருஷ்ணகிரி அருகே கணவனை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலன் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜா கடை அருகே பழையூரில் வசித்து வந்தவர் வடிவேல்(29). இவரது மனைவி ஆஷா(24). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளது. வடிவேல் தர்மபுரியில் உள்ள ஸ்வீட் கடை ஒன்றில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (20) சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவருக்கும் வடிவேல் மனைவி விழாவிற்கு 6 மாதங்கள் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது இதுகுறித்து ஆஷா கணவர் ஆஷாவிற்கும் கடந்த 6 மாதங்களாக கள்ளத்தொடர்பு இருந்துவந்துள்ளது. காலபோக்கில் இருந்த விவகாரம் வடிவேலுக்கு தெரியவந்ததையடுத்து அவர் மனைவியை கண்டித்துள்ளார்.

 இதனால் தனது கள்ளக்காதலன் மணிகண்டனிடம் தாம் தொடர்ந்து பழகுவது கடினம் என கூறினார். இதனையடுத்து இருவரும் வடிவேலு கொலை செய்ய முடிவு செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் வடிவில் உறங்கிக் கொண்டிருந்தபோது ஆஷா தனது கள்ளக்காதலன் மணிகண்டனை வீட்டிற்கு வரவழைத்தார்.  இருவரும் வீட்டில் கிடந்த பெரிய இரும்பு ராடால் வடிவேலை அடித்துள்ளனர். இதனையடுத்து, வடிவேல் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.  கணவரை கொலை செய்த கொஞ்சம் கூட அச்சம் இல்லாமல் இருவரும் இரவு முழுவதும் உல்லாசமாக இருந்துள்ளனர். 

பின்னர் இருவரும் ஒன்றும் தெரியாதது போல் வீட்டிலிருந்து கொண்டனர். வழக்கமாக காலையில் வடிவேல் வீட்டை விட்டு வெளியே வந்து பால் வாங்கி செல்வார். ஆனால், நேற்று அவர் வரவில்லை. மேலும், மனைவி ஆஷாவின் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மனைவியிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த விசாரணையில் வடிவேலுவை இரும்பு ராடால் அடித்து கொலை செய்ததை இருவரும் ஒப்புக்கொண்டதை அடுத்து அவர்களை போலீசார் கை செய்தனர். பின்னர், வடிவேல் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.