திருவனந்தபுரம் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து காதல் கணவரை அடித்து கொன்று தூக்கில் மாட்டிய மனைவியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

திருவனந்தபுரம் அருகே உள்ள பாலோடு வேதாங்கோணம் பகுதியை சேர்ந்தவர் முகமது (வயது 32). இவரது மனைவி பெயர் ஷிபினா (29). இவர்கள் 7 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கணவரின் நண்பரான கோகுல் அடிக்கடி வீட்டுக்கு வரும் போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் முகமது  திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக  மனைவி ஷிபினா போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் முகமதுவின் உடலில் பல இடங்களில் காயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

சந்தேகமடைந்த மருத்துவர் இது தொடர்பாக போலீசில் புகார் செய்தனர்.. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவி ஷிபினாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ஷிபினா கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை அடித்து கொன்றுவிட்டு அவர் தற்கொலை செய்ததாக நாடகமாடியது அம்பலமானது. இதனையடுத்து ஷிபினாவையும், அவரது கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.