கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவரை மனைவி மற்றும் மகள், மாமியார் ஆகியோர் நள்ளிரவில் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொள்ளப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அடுத்துள்ள ஜீவா நகரை சேர்ந்தவர் கந்தசாமி (45), பில்டிங் காண்ட்ரக்டர். இவரது மனைவி அங்கம்மாள்(40).  இவர்களது மகள் சாந்தி (19) ஒரு வாலிபருடன் காதல் ஏற்பட்டு, அவருடன் வீட்டை விட்டு வெளியேறியவர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கே வந்து விட்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அங்கம்மாளும், சாந்தியும் அருகில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டனர். கந்தசாமி மட்டும் வீட்டின்  வெளியே கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவில் கந்தசாமி மீது யாரோ பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். அலறியடித்த அவரை பொதுமக்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த  கந்தசாமி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முக்கியமாக கந்தசாமியின் மனைவி அங்கம்மாள், மகள் சாந்தி, மற்றும் எல்லம்மாள் ஆகியோரிடம் துருவி துருவி விசாரனை நடத்தினார். அப்போது, தாங்கள் தான் கந்தசாமியை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டு ஓடினோம் என தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான அங்கம்மாள், தனது கணவரை எதற்காக கொலை செய்தேன் என்பது தொடர்பாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். விசாரணையில் அவர்கள் சிக்கியதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.