போடியில் மனைவி கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்தை நேரில் பார்த்த கணவரை கொடூர கொலை செய்தவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட கூடுதல் அமர்சவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வாங்கியுள்ளது. 

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ஜக்கமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த கூலி தொழிலாளி ராமர். இவரது மனைவிக்கும், அதே பகுதியைச் சோ்ந்த குருசாமி மகன் முருகன் என்பவருக்கும் நீண்ட காலமாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதை அறிந்த கணவர் மனைவியை கண்டித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த முருகன், கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ராமரை வழிமறித்து கடுமையாக தாக்கியுள்ளார். இதனால், படுகாயமடைந்த ராமர் சிகிச்சைப் பலனின்றி போடி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ராமரின் சகோதரர் பாலமுருகன், போடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், ராமரை கொலை செய்ததாக முருகனையும், இதற்கு உடந்தையாக இருந்ததாக ராமரின் மனைவியையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை தேனி மாவட்டக் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கினை விசாரித்த நீதிபதி அப்துல் காதர் ராமரை கொலை செய்த முருகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும், ராமா் மனைவியை இந்த வழக்கிலிருந்து விடுவித்தும் தீர்ப்பளித்தார்.