பெரம்பலூர் அருகே கள்ளக்காதலை விட மறுத்ததால் தாயை கொடூரமாக தாக்கி மண்டையை உடைத்த 2 மகன்கள் மற்றும் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, மேலப்பாளையம் அருகே உள்ள மணப்பறவையை சேர்ந்தவர் கண்ணன்(42). இவரது மனைவி ஜெயா(36). இவர்களுக்கு 17 வயது மற்றும் 15 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருவர் கல்லூரியிலும், மற்றொருவர் 12ம் வகுப்பு படித்து வருகின்றனர். தாய் ஜெயா திருவாரூரில் உள்ள திருவடஞ்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். பின்னர், பணிமாறுதலாகி பெரம்பலூர் மாவட்டம் ரங்கநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 6 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார்.

இதனிடையே, ஜெயாவிற்கும் 108 ஆம்புலன்சில் வேலைபார்க்கும் ஓட்டுநருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவன், 2 மகன்களும் சொந்த ஊரில் இருப்பதால் ஜெயாவுக்கு ரொம்ப வசதியாக போனது. தனிமையில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். சரியாக ஊருக்கும் வருவதில்லை. நாளடைவில் இந்த விவகாரம் கணவர் மற்றும் அவர்களது 2 மகன்களுக்கும் தெரியவந்தது. 

இதனையடுத்து, ரங்கநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று அங்கிருந்த ஜெயாவிடம், கள்ளக்காதலை விட்டுவிடுமாறு அறிவுரை வழங்கினர். அப்போது ஜெயாவிற்கும், கண்ணனுக்கும் இடையே  கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த கண்ணன் மற்றும் அவரது 2 மகன்களும் சேர்ந்து ஜெயாவை சேர்ந்து கட்டை மற்றும் இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கியுள்ளனர். 

 இதில், ஜெயாவின் மண்டை பொளந்து ரத்தம் கொட்டியது. ஜெயாவின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஓடிவந்து ஜெயாவை தாக்கிய 3 பேரையும் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செவிலியர் ஜெயாவை தாக்கிய கணவர் கண்ணன் மற்றும் மகன்கள் 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.