கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகா தலவட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார் தனியார் பஸ் ஏஜண்டாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி லதா  இவர் தனியா;h மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதியின் மகள் அம்ருதா . இரியூரில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்த நிலையில் நேற்று காலை 7.30 மணி அளவில் அருண்குமாரின் வீட்டில் இருந்து அதிகளவில் கரும்புகை வெளியானது. மேலும் அலறல் சத்தம் கேட்டதால், அந்தப்பகுதி மக்கள் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது அருண்குமார், லதா, அம்ருதா ஆகியோரின் உடல்களில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து 3 பேர் மீதும் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிய 3 பேரையும் அவர்கள் மீட்டு இரியூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சித்ரதுர்கா அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர்கள் 3 ேபரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்துவிட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோட்டை போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கும், மருத்துவமனைக்கும் சென்று விசாரணை நடத்தினார்கள். அவருடைய வீட்டின் அருகே வசிப்பவர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

போலீஸ் விசாரணையில், தனியார் பஸ் ஏஜண்டாக இருக்கும் அருண்குமாருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாக தெரிகிறது. இந்த கள்ளத்தொடர்பு விவகாரம் தொடர்பாக அருண்குமாருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதுதொடர்பாக நேற்று காலையும் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக அவர்கள் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து, மகள் அம்ருதாவின் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்தனர். பின்னர் அவர்கள் தங்களது உடலிலும் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டனர். இதில் அவர்கள் 3 பேரும் உடல் கருகி பலியானது தெரியவந்தது.

இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரின் தற்கொலைக்கு வேறு காரணம் உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் தம்பதி, மகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.