தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்து இருந்ததால் அவரது மர்ம உறுப்பை துண்டித்து கொடூரமாக கொலை செய்ததாக கைதான வாலிபர்  போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னையை அடுத்த மாங்காடு அருகே உள்ள மலையம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (30). தனியார் நிறுவன டிரைவர். இவருக்கு அபிராமி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர், கடந்த 26-ம் தேதி வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை அருகே உள்ள செங்கல் சூளை பகுதிக்கு நண்பருடன் சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் ரஞ்சித்குமாரை சரமாரியாக வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதுதொடர்பாக மாங்காடு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு வரைந்த போலீசார் ரஞ்சித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனையடுத்து,வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கொலை வழக்கு தொடர்பாக மலையம்பாக்கத்தைச் சேர்ந்த விமல் (22), பிரேம்குமார்(19) மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகிய 3 பேரை திருமழிசையில் பதுங்கி இருந்தபோது போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

இதனையடுத்து, கைதான விமலிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில், எனது தாயுடன் ரஞ்சித்குமாருக்கு கள்ளத்தொடர்பு இருந்தது. இருவரும் உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்த நான், ரஞ்சித்குமாரை கண்டித்தேன். எனது தாயுடனான கள்ளத்தொடர்பை கைவிடும்படி அவரை எச்சரித்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால் நான், எனது வீட்டுக்கு செல்வதையும் தவிர்த்தேன்.

எனது தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்து உள்ள ரஞ்சித்குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த நான். எனது நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டேன். அதன்படி ஊரடங்கு காரணமாக வேலை இன்றி வீட்டில் இருந்த ரஞ்சித்குமாரை, அவரது நண்பர் ஒருவர் மூலமாக சிகரெட் பிடிக்க வரும்படி செங்கல் சூளைக்கு வரவழைத்து வெட்டிக்கொலை செய்தேன். எனது தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரத்தில் அவரது மர்ம உறுப்பையும் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டோம். ஆனால் போலீசார் எங்களை கைது செய்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.