கடந்த 4ம் தேதி மாலை மீண்டும் உடல் நிலை பாதிப்படைந்தது. உடனே திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல் மேலும் மிகவும் மோசமாக ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 6ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேவேந்திரனின் உடல் அன்றே அவரது ஊருக்கு கொண்டு வரப்பட்டு அவசர அவசமாக தகனம் செய்யப்பட்டது.

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதற்கு தடையாக இருந்த திமுக ஒன்றிய கவுன்சிலரை விஷம் வைத்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வேட்டைக்காரனிருப்பு, சடையன் காடு பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன் (47). கீழையூர் ஒன்றிய திமுக கவுன்சிலராக இருந்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் முதல் மஞ்சள் காமாலை மற்றும், கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சுமார் 10 நாட்கள் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த டிசம்பர் 15ம் தேதி வீடு திரும்பினர்.

இந்நிலையில், கடந்த 4ம் தேதி மாலை மீண்டும் உடல் நிலை பாதிப்படைந்தது. உடனே திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல் மேலும் மிகவும் மோசமாக ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 6ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேவேந்திரனின் உடல் அன்றே அவரது ஊருக்கு கொண்டு வரப்பட்டு அவசர அவசமாக தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், தேவேந்திரனின் இறப்புக்கு பிறகு அவரது மனைவி சூர்யா (26) தினமும் தனிமையில் செல்போனில் பேசிக்கொண்டு வந்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த தேவேந்திரனின் உறவினரான சதீஷ்கண்ணா என்பவர் தேவேந்திரன் மனைவியின் செல்போனை ஆய்வு செய்தார். தேவேந்திரன் மனைவி சூர்யாவிற்கும், தேவேந்திரன் வீட்டில் கடந்த 15 வருடங்களாக வேலை பார்த்து வந்த அதே பகுதியை சேர்ந்த இன்ஜினியர் சந்திரசேகரன் (32) என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்து தெரியவந்தது.

தேவேந்திரன் உறவினர்கள் சந்திரசேகரனை அழைத்து அடித்து உதைத்து விசாரணை செய்தனர். அப்போது, சந்திரசேகரன் தனக்கும், சூர்யாவிற்கும் கடந்த 3 மாத காலமாக கள்ளத்தொடர்பு இருந்து வருவதாகவும், கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி காலை, தேவேந்திரன் சாப்பிட்ட உணவில் (சாம்பாரில்) எலி பேஸ்டை கலந்ததாகவும், தான் கலந்தது அவரது மனைவி சூர்யாவிற்கும் தெரியும் என கூறினார்.

இதையடுத்து கள்ளக்காதலன் சந்திரசேகரனும், சூர்யாவும் வேட்டைக்காரனிருப்பு விஏஓ பிரபாகரனிடம் சரணடைந்தனர். இதனையடுத்து வேட்டைக்காரனிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யாவையும் மற்றும் அவரது கள்ளக்காதலன் சந்திரசேகரன் ஆகியோரை கைது செய்தனர். கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதற்காக கணவனை விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.