கேரளாவில்  பல் மருத்துவர் கத்தியால் குத்திக் கொன்ற கள்ளக் காதலனை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கூட்டநெல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சோனா (30). பல் டாக்டரான இவர், அப்பகுதியில் டென்டல் கிளினிக் நடத்தி வந்தார். கடந்த 6 வருடங்களுக்கு முன் டாக்டர் சோனாவுக்கு திருமணம் நடந்தது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக ஒரு சில வருடங்களிலேயே இவர் கணவனை விட்டுப் பிரிந்து விட்டார். இதன் பிறகு சோனா பெற்றோருடன் வசித்து வந்தார்.

பிரசித்தி பெற்ற டென்டல் கிளினிக் என்பதால் சோனாவின் கிளினிக்கில் எப்போதும் நோயாளிகள் கூட்டம் அலைமோதும். இதையடுத்து தனது கிளினிக்கை விரிவுபடுத்த சோனா முடிவு செய்தார். இந்த பணிகளுக்காக வந்த அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவருடன் சோனாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இதையடுத்து இருவரும் திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ முடிவு செய்தனர். திருச்சூரில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் இருவரும் வசித்து வந்தனர். இந்த குடியிருப்பை சோனா தான் வாங்கினார். இந்நிலையில் சோனாவிடமிருந்து மகேஷ் அடிக்கடி பணம் கடன் வாங்கி வந்தார். 22 லட்சம் வரை அவர் பணம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதை சோனா திருப்பிக் கேட்டார். இது தொடர்பாக அவர்களிடையே இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஒல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இதனால், ஆத்திரமடைந்த அவர் மகேஷ் கத்தியால் சோனாவை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடி விட்டார். ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய மகேஷை கைது செய்தனர்.