எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டிய.. மாமியாருடன் கள்ளக்காதல்.. நேரில் பார்த்த மருமகன்.. இறுதியில் நடந்த பயங்கரம்
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த பூச்சி அத்திப்பேடு கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (60). இவருக்கும் எஸ்தர்(42) என்ற பெண்ணுக்கும் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
மாமியாரின் கள்ளக்காதலனை மருமகன் கொடூரமாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த பூச்சி அத்திப்பேடு கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (60). இவருக்கும் எஸ்தர்(42) என்ற பெண்ணுக்கும் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. மேலும் எஸ்தரின் இரு மகள்களுக்கும் திருமணம் முடிந்த நிலையில் அவரது வீட்டின் அருகே இளைய மகள் தீபிகா, மருமகன் மணிகண்டன் ஆகியோர் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.
இந்த விவகாரம் மருமகனுக்கு தெரியவந்ததை அடுத்து முத்துகிருஷ்ணனை பார்த்து எனது மாமியார் வீட்டிற்கு வரவேண்டாம் என மணிகண்டன் எச்சரித்துள்ளார். இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் முத்துகிருஷ்ணன் வழக்கம் போல வீட்டிற்கு வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மருமகன் முத்துகிருஷ்ணிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் மணிகண்டன் இளநீர் வெட்டும் அரிவாளால் முத்துகிருஷ்ணன் தலையில் சரமாரி வெட்டியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது மருமகன் அங்கிருந்து தப்பி சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முத்துகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த மணிகண்டனை கைது செய்தனர்.