திருப்பூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள கொடுமுடி ஹைஸ்கூல் மேடு பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (37). இவரது மனைவி சங்கீதா(33). சங்கீதா பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்தவர் விவேக் (28). பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரிடம் பியூட்டி பார்லரை விரிவுப்படுத்துவதற்காக பணம் வாங்கியுள்ளார். 

இதனையடுத்து, இருவருக்கும் நட்பு ஏற்பட்டு அடிக்கடி பேச ஆரம்பித்தனர். பின்னர்,  விவேக் அடிக்கடி பணம் வாங்குவதற்காக சங்கீதாவின் பியூட்டி பார்லருக்கு சென்றுள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. தனிமையில் இருவரும் அடிக்கடி உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர். பின்னர், சங்கீதாவை திருமணம் செய்ய விவேக் ஆசைப்பட்டுள்ளார். ஆனால், இதற்கு சங்கீதா சம்மதிக்கவில்லை.

இந்நிலையில், நேற்று இரவு விவேக், சங்கீதாவின் வீட்டிற்கு சென்றார். அங்கு சென்று கதவை தட்டினார். அப்போது யுவராஜ் வந்து கதவை திறந்தார். விவேக், யுவராஜை  கடுமையாக தாக்கி இழுத்து தள்ளினார். கணவரின் அலறல் சத்தம் கேட்டு எழுந்து வந்த சங்கீதா ஓடி வந்தார். சங்கீதாவை ரூமில் தள்ளி மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். அதற்கு சங்கீதா மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த விவேக் சல்பாக் மாத்திரையை சங்கீதாவின் வாயில் திணித்து அவரது கழுத்தை நெரித்துள்ளார். 

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினரும் உதவியுடன் கணவர் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து விவேக் தள்ளிவிட்டு மனைவியை பார்த்தார். மயங்கி நிலையில் இருந்த மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாரை மயங்கிய நிலையில் இருந்த விவேக்கை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.