Asianet News TamilAsianet News Tamil

ஜாதகம் பார்க்க சென்ற இடத்தில் ஜோதிடருடன் மல்லிகா கள்ளக்காதல்.. அடிக்கடி உல்லாசம்.. இறுதியில் நேர்ந்த பரிதாபம்

கள்ளக்காதல் விவகாரத்தில் ஜோதிடர் கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.

illegal love...Astrologer murder
Author
Erode, First Published Apr 9, 2021, 6:52 PM IST

கள்ளக்காதல் விவகாரத்தில் ஜோதிடர் கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள ஒரிச்சேரிபுதூர் மல்லியூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி மல்லிகா (46). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழனிசாமி உயிரிழந்தார். இதேபோல் கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்தவர் ஜோதிடர் பழனிசாமி (57). இவரிடம் மல்லிகா அடிக்கடி ஜாதகம் பார்க்க சென்று உள்ளார். அப்போது இவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.

illegal love...Astrologer murder

இதையடுத்து ஜோதிடர் பழனிசாமி அடிக்கடி மல்லிகா வீட்டிற்கு வந்து அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். இதை மல்லிகாவின் உறவினர்கள் கண்டித்தனர். ஆனாலும், அவர்களுக்கு இடையே கள்ளக்காதல் நீடித்தது. இதனையடுத்து, மல்லிகாவின் உறவினர்கள் ஜோதிடர் பழனிசாமியை நேற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதன்படி அவரும் அங்கு வந்தார். 

அப்போது அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மல்லிகாவின் உறவினர்கள் சென்னாநாயக்கர், கோவிந்தன், சூரிய பிரகாஷ், பிரபு, குமார், சின்னம்மாள் ஆகியோர் சேர்ந்து ஜோதிடர் பழனிசாமியை தாக்கினர். இதையடுத்த அவர் அருகில் கிடந்த கத்தியை எடுத்து அனைவரையும் கத்தியால் குத்தியுள்ளார். 

illegal love...Astrologer murder

இதனால் ஆத்திரம் அடைந்த மல்லிகாவின் உறவினர்கள் 6 பேரும் சேர்ந்து ஜோதிடர் பழனிசாமியை கல்லால் அடித்தனர். இதில், ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த ஜோதிடர் உயிரிழந்தார். உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்த 6 பேரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் ஜோதிடர் பழனிசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios