Asianet News TamilAsianet News Tamil

கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட கள்ளக்காதலி.. ஆத்திரத்தில் துடிதுடிக்க கொன்ற வாலிபர்.. நடந்தது என்ன?

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன். இவரது மனைவி சுசிலா (34). இருவருக்கும் 17 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குமரேசன் (15), கவுசிக் (13) என இரண்டு மகன்கள் உள்ளனர். 

illegal love affair...Women stabbed to death tvk
Author
First Published Oct 29, 2023, 8:45 AM IST

திருத்தணி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் கொடூரமாக குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன். இவரது மனைவி சுசிலா (34). இருவருக்கும் 17 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குமரேசன் (15), கவுசிக் (13) என இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து சுசிலா கணவனை பிரிந்து மகன்களுடன் திருத்தணி காந்திரோடு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். 

இதையும் படிங்க;- சினிமா பாணியில் சென்னை டிராப்பில் வைத்து 5 ஆண்டுகளாக தலைமறைமாக இருந்த முக்கிய ரவுடி கைது.!

இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த  சுசிலாவை  மர்ம நபர் ஒருவர் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பித்தார். ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.  இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு ததகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க;-  ஓயாத முனகல் சத்தம்! எட்டி பார்த்த உதயகுமார்! கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த பூசாரியை புரட்டி எடுத்து கொலை!

பின்னர் இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, முத்துக்கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், சுசிலாவுக்கும் ரஞ்சித்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது.  அந்த இளைஞர் அடிக்கடி சுசிலாவிடம் பணம் வாங்கி வந்துள்ளார். இந்நிலையில், பிரச்சினை இருப்பதால் கொடுத்த பணத்தை சுசிலா திருப்பி கேட்டுள்ளார். இதனால் ஆதத்திரமடைந்த  ரஞ்சித்குமார் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. தையடுத்து ரஞ்சித்குமாரை கைது செய்த போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios