என் புருஷன் உயிரோடு இருக்கிற வரைக்கும் நம்ம ஒன்னு சேர முடியாது.. அசால்டா போட்டு தள்ளிவிட்டு நாடகமாடிய மனைவி.!

சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படித்த போது அங்கு பணியாற்றி வந்த  சீனிவாசன் (30) என்பவருடன் காதலித்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் பெற்றொருக்கு தெரியவந்ததை அடுத்து அவசர அவசரமாக தாய்மாமன் மகன் யுவராஜுக்கு காயத்ரியை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

illegal love affair... wife who killed her husband

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை போட்டு தள்ளிவிட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடிய மனைவி மற்றும் கள்ளக்காதலன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த சந்திரவிலாசபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சுந்தர்ராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ் (29). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு அவரது தாய்மாமன் மகள் காயத்ரி (25) என்பவருடன் 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. 

இதையும் படிங்க;- நைட் ஷிப்டுக்கு வந்த இளம் பெண்ணிடம் கண்ட இடத்தில் கை வைத்து சில்மிஷம்.. அடுத்த நிமிடமே ஐடி ஊழியர் கைது.!

illegal love affair... wife who killed her husband

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்த காயத்திரி திடீரென அலறி கூச்சலிட்டபடியே அழுது கதறினார். என்ன ஆச்சோ எது ஆச்சோ என்ற பதற்றத்துடன் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது யுவராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், தன்னுடைய மகன் சாவில் மர்மம் இருப்பதாக தந்தை ஆறுமுகம் ஆர்.கே.பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

illegal love affair... wife who killed her husband

இது தொடர்பாக  யுவராஜ் மனைவி காயத்ரியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனையடுத்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுதொடர்பாக போலீசாரிடம் கூறுகையில்;- சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படித்த போது அங்கு பணியாற்றி வந்த  சீனிவாசன் (30) என்பவருடன் காதலித்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் பெற்றொருக்கு தெரியவந்ததை அடுத்து அவசர அவசரமாக தாய்மாமன் மகன் யுவராஜுக்கு காயத்ரியை திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனாலும், சில ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் சந்தித்த போது காதலை மறக்க முடியாததால் சீனிவாசனுடன்  மீண்டும் பழக ஆரம்பித்துள்ளார். அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்தோம். மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர் வேலையில் இருந்து நிறுத்திவிட்டார். 

இதையும் படிங்க;-  ஆன்ட்டியின் அழகில் மயங்கிய இன்ஜினியர்.. நேரம் பார்த்து வீட்டில் புகுந்து பலாத்காரம்.. இறுதியில் நடந்த பயங்கரம்

illegal love affair... wife who killed her husband

இதனால் கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார். அதன்படி, நேற்று முன்தினம் வீட்டில் யுவராஜ் தூங்கிக் கொண்டிருந்தபோது காயத்ரி, கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து  யுவராஜ் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர், அதை தற்கொலை என ஊர் மக்களை நம்ப வைப்பதற்கு, சடலத்தை தூக்கில் தொங்கவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். மறுநாள் காலை கணவர் தற்கொலை செய்து கொண்டதாக காயத்ரி நாடகமாடி அனைவரையும் நம்பவைக்கும் முயற்சியில் செய்தது அம்பலமானது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக காயத்ரி, சீனிவாசன், மணிகண்டன், ஜில்லு ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios