நேரில் பார்த்த மாரியப்பன் அவருடன் உள்ள கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறி வந்துள்ளார். அதனை அமுதா கைவிட மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நெல்லையில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் பணகுடியை அருகே சூசையப்பர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில், மாரியப்பன் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, திருமணமாகி கணவரால் கைவிடப்பட்ட அமுதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி உல்லாமாக இருந்து வந்துள்ளனர். இருவரும் வீடு எடுத்து கணவன் மனைவி போல வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், அமுதா செங்கல் சூளையில் வேலை பார்க்கும் வேறு ஒரு ஆணுடன் தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை நேரில் பார்த்த மாரியப்பன் அவருடன் உள்ள கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறி வந்துள்ளார். அதனை அமுதா கைவிட மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பன் அமுதாவை கொலை செய்ய திட்டம் தீட்டினார். வழக்கல் போல வேலைக்கு வருமாறு அண்ணத்திக்குளம் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அமுதாவை மாரியப்பன் அழைத்து சென்றுள்ளார். அப்போது, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாரியப்பன் ஆத்திரம் தீர நெஞ்சு, கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமுதாவை சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

பின்னர் மாரியப்பன் நேராக பணகுடி காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை அழைத்து கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். அங்கு ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்த அமுதாவை மீட்டு பணகுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்து முதலுதவி அளித்த மருத்துவர்கள் அமுதாவை மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
