செல்வராஜ் வீட்டுக்கு வெற்றி அடிக்கடி செல்வது வழக்கம். அதில், அவரது மனைவி காமாட்சியுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். நாளடைவில் இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்ததையடுத்து மனைவியை கண்டித்துள்ளார்.

கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்ததையடுத்து கண்டித்த கணவரை மனைவி, கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கள்ளக்காதல்

சென்னை குன்றத்தூர் அடுத்த மாங்காடு கீழ் ரகுநாதபுரம் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (35). சொந்தமாக லோடு ஆட்டோ வாடகைக்கு ஓட்டிவந்தார். இவரது மனைவி காமாட்சி (27). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். செல்வராஜின் நண்பர் வெற்றி (25). அப்பகுதியில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கு சவுண்ட் சர்வீஸ், கொடி அலங்காரம் செய்து வந்தார். 

ரத்த வெள்ளத்தில் கொலை

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் செல்வராஜை, செல்போனில் வெற்றி தொடர்பு கொண்டு உங்களது லோடு ஆட்டோ தீ பற்றி எரிகிறது என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த செல்வராஜ் ஓடி வெளியே வந்த போது வெற்றி நின்றிருந்தார். அப்போது, தண்ணீர் எடுத்து வருவதாக கூறிவிட்டு வெற்றி சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் செல்வராஜை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த செல்வராஜ் மயங்கினார். இதனையடுத்து, அக்கும்பல் அங்கிருந்து தப்பியது. 

தண்ணீர் எடுக்க சென்ற வெற்றி வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் செல்வராஜ் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு செல்வராஜ், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

கிடுக்குப்பிடி விசாரணை

சந்தேகத்தின் பேரில் வெற்றியை பிடித்து போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திதினர். அதில், நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக போலீசார் கூறுகையில்;- செல்வராஜ் வீட்டுக்கு வெற்றி அடிக்கடி செல்வது வழக்கம். அதில், அவரது மனைவி காமாட்சியுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். நாளடைவில் இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்ததையடுத்து மனைவியை கண்டித்துள்ளார். இதையடுத்து செல்வராஜை தீர்த்துக்கட்ட மனைவி மற்றும் கள்ளக்காதலன் திட்டமிட்டனர். ஆட்டோ பேட்டரியில் நள்ளிரவில் தீ வைத்துவிட்டு, ஆட்டோ எரிவதாக வெற்றி செல்போனில் கூறியுள்ளார். அதை நம்பி வந்த செல்வராஜை, நண்பர்களை வைத்து வெட்டி கொலை செய்தது தெரியவந்துள்ளது. கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியே கணவரை கொலை செய்ய சொன்ன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.