கணவனை பிரிந்து கள்ளக்காதலனுடன் வாழ்ந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். போதை மருந்து பழக்கத்தால் உயிரை மாய்த்துக்கொண்டார்.

திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு சுந்தரம் நகர் பகுயை சேர்ந்தவர் தியாகு (36) கழிவறை சுத்தம் செய்யும் பணி செய்து வருகிறார். இவரிடம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் மனைவி புவனேஸ்வரி (35) கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது தியாகுவுக்கும், புவனேஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. இதனை புவனேஸ்வரியின் கணவர் வேலாயுதம் கண்டித்துள்ளார். இருப்பினும் அவர்கள் இருவரும் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த வேலாயுதம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை பிரிந்து சென்றுவிட்டார். அதனால் தியாகு மற்றும் புவனேஸ்வரி இருவரும் கணவன்- மனைவி போல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். தியாகு மற்றும் புவனேஸ்வரி இருவரும் போதைக்கு அடிமையாகி உள்ளனர். தியாகு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று குடியை நிறுத்த மருந்து மாத்திரை சாப்பிட்டுள்ளார். ஆனால் புவனேஸ்வரி குடிப்பதை கைவிட வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஒரு காலகட்டத்தில் மனநலம் பாதித்தவராக மாறியுள்ளார்.

தியாகு மது வாங்கி கொடுப்பதை நிறுத்தி உள்ளார். இதனால் மேலும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கள்ளக்காதலி புவனேஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத போது மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.