சென்னையில் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த 2 மாத பெண் குழந்தையை கள்ளக்காதலன் அடித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் துர்கா (25). இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆறுமுகம் என்பவருடன் திருமணம் நடந்தது. இருவருக்கும் ஜான்குமார் (5) என்ற மகனும், ஜெனிபர் (4) என்ற மகளும் உள்ளனர். இவர் 2 ஆண்டுகளுக்கு முன்னர் கணவரை பிரிந்து வந்து தனியாக வசித்து வந்தார். இதனிடையே, கே.கே.நகர் டாக்டர் அம்பேத்கர் காலனியை சேர்ந்த கூலி தொழிலாளியான எல்லப்பன் (27) என்பவருடன் துர்காவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

இது நாளடைவில் இருவருக்கும் கள்ளக்காதலாக மாறியது. தனிமையில் இருக்கும் போதேல்லாம் இருவரும் உல்லாசமாக இருந்து வந்தனர். 
அதன்பிறகு கள்ளக்காதலனுடன் துர்கா தற்போது டாக்டர் அம்பேத்கர் காலனியில் வசித்து வருகிறார். கள்ளக்காதலன் உறவால் துர்காவுக்கு மது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் துர்கா கள்ளக்காதலனுடன் சேர்ந்து தினமும் மது அருந்திவிட்டு ஒன்றாக தூங்குவது வழக்கம். இதற்கிடையே துர்காவுக்கு கள்ளக்காதலனால் ராஜ்மாதா என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததால் துர்கா நெருக்கமாக இருப்பதை தவிர்த்து வந்துள்ளார். ஆனால் எல்லப்பன், தன்னுடன் நெருக்கமாக இருக்க வர மறுத்ததால் குழந்தையை அடித்து தனது காரியத்தை சாதித்து வந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று அதிகாலை துர்கா குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது மது போதையில் வீட்டிற்கு வந்த எல்லப்பன், உடனே துர்காவிடம் இருந்த குழந்தையை வலுக்கட்டாயமாக பிடுங்கி தரையில் போட்டுவிட்டு உல்லாசமாக இருந்துள்ளார். பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தை மீண்டும் பசியால் அழுது துடித்துள்ளது. இதனால் துர்கா குழந்தைக்கு பால் கொடுக்க காதலனிடம் இருந்து விலக முற்பட்டார். உடனே, ஆத்திரமடைந்த எல்லப்பன் இரண்டரை மாத குழந்தை வேகமாக தள்ளியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த குழந்தை ரத்தம் வெளியேறி உயிருக்கு போராடியது. 

பிறகு துர்கா குழந்தையை பார்த்த போது மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்தது. அதை பார்த்து அதிர்ச்சியடைந்த துர்கா உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு  தூக்கி சென்று மருத்துவரிடம் காட்டியுள்ளார். ஆனால், குழந்தையை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதை கேட்டு துர்கா மருத்துவமனை வளாகத்திலேயே அழுது துடித்தார். பிறகு இதுதொடர்பாக எம்ஜிஆர் நகர் காவல் புகார் அளித்தார். விரைந்து வந்த போலீசார், குழந்தை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.