கோவை பீளமேட்டைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி பார்வதி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அந்த மகளுக்கு திருமணம் செய்து பேரனும் உள்ளார். இந்நிலையில் பார்வதியின் வீட்டில் கார் டிரைவராக இருந்த ஈஸ்வரன் என்பவருக்கும், பார்வதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக் காதலாக மாறியது.

இதையடுத்து அவர்கள் இருவரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உலலாசமாக இருந்துள்ளனர். ஒரு நாள் இந்த விஷயம் பார்வதியின் கணவருக்கு தெரியவர, உடனடியாக பார்வதி கள்ளக் காதலன் ஈஸ்ரனுடன் ஓட்டம் பிடித்தார். இருவரும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்த ஓலப்பாளையத்தில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.

பார்வதி வீட்டைவிட்டு ஓடி வரும் போது பணம், நகைகள், சொத்து பத்திரங்கள் போன்றவற்றை எடுத்து வந்துவிட்டார். தன்னிடம் உள்ள நகைகள், சொத்துக்களை விற்று ஈஸ்வரனுடன் ஜாலியாக காம விளையாட்டுகளில் பார்வதி ஈடுபட்டு வந்தார்.

ஈஸ்வரனுக்கு ஏற்கனவே திருமணமாகி மல்லிகா என்ற மனைவி உள்ளார். இதனிடையே பார்வதியின் மீது இருந்த மோகம் குறைந்ததால், ஈஸ்வரன் அவரை விட்டு விலகி தனது மனைவியுடன் சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த பார்வதி, ஈஸ்ரன் வீட்டுக்குச் சென்று, தன்னிடம் வாங்கிய ஒன்றரைக் கோடி ரூபாயைத் திருப்பித் தருமாறு கேட்டு சண்டை போட்டுள்ளார்.

ஆனால் பணத்தைத் திருப்பித் தர மறுத்த ஈஸ்வரன், தனது மனைவி மற்றும் மைத்துனருடன் சேர்ந்து பார்வதியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இது குறித்து பார்வதி குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையறிந்த ஈஸ்வரன் குடும்பத்தினர், பார்வதியை ஆபாசமாக திட்டியதுடன், கொலை மிரட்டலும் விடுத்தனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பார்வதி, குமாரபாளையம் போலீஸ் நிலையம் முன்பு உடலில் மண்ணெண்னையை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார்.

இதைப்பார்த்த போலீசாரும், பொது மக்களும் பார்வதியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.