ரூர் ரங்கநாதன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலா என்ற பாலச்சந்தர். இவரது மனைவி பவானி. இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தை உள்ளது. இவர் காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் கெங்கையம்மன் கோவில் அருகே உள்ள பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

பாலச்சந்தரும், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இவெல் என்பவரும் மாமல்லபுரம் தங்கும் விடுதி ஒன்றில் பணிபுரிந்து வந்தனர். பாலச்சந்தர், இவெல் இருவரும் நண்பர்கள்.

இந்த நிலையில் பாலச்சந்தர் இல்லாத நேரத்தில் இவெல் அடிக்கடி அவரது வீட்டுக்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது. நேற்று மதியம் பாலச்சந்தரின் வீட்டுக்கு இவெல் சென்றார். தொடர்ந்து பாலச்சந்தரும் சென்றார். சற்று நேரத்தில் அங்கு இருந்து அலறல் சத்தம் கேட்டதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று பார்த்தனர். 

இவெல் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளதில் இறந்து கிடந்தார். பாலா தனது மனைவி பவானியை அழைத்துக்கொண்டு தப்பி செல்ல முயன்றார். அந்த பகுதி மக்கள் பாலச்சந்திரனை பிடித்து திருப்போரூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் பாலச்சந்தரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இவெல் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

போலீசார் விசாரணையில் பாலச்சந்தர் மனைவிக்கும். இவெலுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததும், நேற்று அவர்கள் இருவரும் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டதை பார்த்த பாலச்சந்தர் குடிபோதையில் இவெலை சரமாரியாக கட்டையால் தாக்கி கொலை செய்ததும் தெரியவந்தது.