சென்னையில் வேறொருவருடன் தொடர்பில் இருந்து கொண்டு அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்த கள்ளக்காதலியை படுகொலை செய்துவிட்டு, பயத்தில் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை கக்கன்ஜி தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (46), ஆட்டோ ஓட்டுநர். நேற்று காலை, இவருடைய வீட்டின் கதவு நீண்ட நேரமாகியும் திறக்காமல் இருந்து. இதனால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் கதவை திறந்து எட்டிப்பார்த்த போது ஆட்டோர் ஓட்டுநர் சுரேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகவும், ஒரு பெண் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக உடனே பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில்;- சுரேஷ் ஏற்கனவே திருமணமானவர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக அவரது மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் கூடுவாஞ்சேரி, மோகன பிரியா நகரை சேர்ந்த ராணி (33) கணவரை இழந்து வாழ்ந்து வந்தார். இவருக்கும் ஆட்டோ ஓட்டுனருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 

இந்நிலையில், கடந்த சில தினங்களாக ராணியை வீட்டுக்கு அழைத்து வந்து சுரேஷ் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனிடையே, கள்ளக்காதலன் வெளியே சென்ற நேரம் பார்த்து கள்ளகாதலி வேறொருடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்து கொலைவெறியில் இருந்த சுரேஷ் சம்பவம் நடந்த அன்று இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது தலையணையை வைத்து ராணியின் முகத்தை அமுக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர், போலீஸ் விசாரணைக்கு பயந்து சுரேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.