திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மணமகனின் தந்தையும் மணமகளின்  தாயும் மாயமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கிறது என்றே தெரியவில்லை என்று ஒரு பழமொழி உண்டு .  அதுபோல யாருக்கு யாருடன் தொடர்பு உள்ளது,   யார் எப்படி நடந்து கொள்வார்கள் என்றே கணிக்க முடியாது அபத்தமான மனநிலை கொண்ட சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சொல்லும் அளவிற்கு குஜராத் மாநிலம் சூரத்தில் ஒரு  வினோத சம்பவம் நடந்துள்ளது .  மகளுக்கும் மகனுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டிய வயதில் சம்பந்திகள் ஓடிப்போய் இருப்பது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

குஜராத் மாநிலம் சூரத்தில் இளம் ஜோடி ஒன்றுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற  இருந்தது திருமணம் செய்து கொள்ள ஆசையாக  காத்திருந்த  இளம் ஜோடிகள் ஆசையில்  அவர்களின் பெற்றோரே  மண்ணள்ளிப் போட்டுள்ளனர் . மகனுக்கு திருமண ஏற்பாடு செய்ய வேண்டிய தந்தை கடந்த 10 ஆம் தேதி காணாமல் போயுள்ளார்.   அதேவேளையில் சில நாட்களில்  மணமகளின் தாயாரும்  மாயமானார் ஒரே நேரத்தில் இருவரும் மாயமானது இரு வீட்டார் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இந்நிலையில் அவர்களின் நெருங்கிய நண்பர்கள் தெரிவித்த தகவலின்படி இருவரும் இளவயதில் காதலித்ததாகவும் அப்போது ஓடிச்சென்று திருமணம் செய்ய முயற்சி செய்தபோது அந்தப் பெண்ணை வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர் . 

அப்போது அவர்களில் காதல் நிறைவேறவில்லை ,  பின்னர் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர் தற்போது பெண்ணின் மகளுக்கும் அந்த நபரின் மகனுக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் நீண்ட நாள்  நிறைவேறாத காதல் ஏக்கத்தில் இருந்த அவர்கள்  இருவரும் தற்போது ஓடிவிட்டதாக தெரிவிக்கின்றனர் .  இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகி வருகிறது.