வேளாங்கண்ணி லாட்ஜில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. உல்லாசமாக இருந்ததை பார்த்துவிட்டதால் சிறுமியை  கொன்றுவிட்டு மற்றொரு குழந்தையுடன் கள்ளக்காதல் ஜோடி ஆந்திரா சென்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில்  பேராலயத்திற்கு சொந்தமான விடுதியில் கடந்த 28ம் தேதி ஒரு முதியவர், பெண் மற்றும் 2 குழந்தைகளுடன் வந்து அறையை எடுத்து தங்கினார். இதன்பின், புத்தாண்டு அன்று அவர்கள் அறையை காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர். கடந்த 3-ம் தேதி அந்த அறையிலிருந்து  துர்நாற்றம் வீசியது. தையடுத்து சந்தேகமடைந்த ஊழியர்கள் உள்ளே  திறந்து பார்த்தபோது அழுகிய நிலையில் 8 வயது மதிக்கத்தக்க சிறுமி  உடல் கிடந்தது. 

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழ்ககப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பாக லாட்ஜ் நிர்வாகத்தில் விசாரித்தபோது, அந்த முதியவர் கோபாலகிருஷ்ணா(54) என்பதும், தனது ஆதார் கார்டை கொடுத்து ரூம் வாடகைக்கு எடுத்ததும் தெரியவந்தது. ஆதார் கார்டில், வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த நெல்வாய் ஆரணி ரோட்டை சேர்ந்தவர் என்பதும், அவருடன் வந்தது நெல்வாய் கிராமத்தை சேர்ந்த டாக்சி டிரைவர் தனசேகரின் மனைவி ஜெயந்தி(33), அவரது குழந்தை மகாலட்சுமி(8), ஸ்ரீலெட்சுமி(6) என  தெரியவந்தது. கோபாலகிருஷ்ணா ஜெயந்தியின் பெரிய மாமனார் ஆவார். அவர்கள் அறையில் 3 நாட்களுக்கு தங்கியிருந்துள்ளனர். அறையில் கிடந்தது சிறுமி மகாலட்சுமியின் சடலம் என தெரியவந்தது. 

மேலும், வேளாங்கண்ணியிலிருந்து ரயிலில் புறப்பட்டு சென்ற ஜெயந்தி, கோபாகிருஷ்ணா, ஸ்ரீலெட்சுமி ஆகியோர் ஆந்திராவில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சடலம் அருகே கோபாலகிருஷ்ணாவின் ஆதார் அட்டை கிடந்தது. தற்கொலை செய்தது தொடர்பாக வேலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து கணவர் தனசேகரிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டது. 

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஜெயந்திக்கும், அவரது பெரிய மாமனார் கோபாலகிருஷ்ணாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. இவர்கள் உல்லாசமாக இருந்த போது மகாலட்சுமி பார்த்துள்ளார். தங்களது கள்ளக்காதல் விவகாரத்தை மற்றவர்களிடம் சொல்லிவிடுவாலோ என்று பயந்து சிறுமியை கொலை செய்துள்ளார். பின்னர் போலீசாரிடம் சிக்கிவிடுவோம் என பயந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இதேபோல போரூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் அபிராமி 2 குழந்தைகள் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.