மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்க முயன்ற  காதல் மன்னன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 17 வயது சிறுமியும் மீட்கப்பட்டுள்ளார். 

சென்னை கொளத்தூர் வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வந்த இளம்பெண் ஒருவர், பாரதி நகர் ஏ.பி.சி. காலனியைச் சேர்ந்த லவ்லி கணேஷ் (22) என்பவரும் கடந்த 2017ம் ஆண்டு முகநூல் பழக்கம் ஏற்பட்டது. இந்த நாளடைவில் காதலமாக மாறியது.  இந்நிலையில்ட, இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். கடந்த மாதம் 5-ந்தேதி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கணேஷ், இளம்பெண்ணின் கழுத்தில் தாலியை கட்டி குடும்பம் நடத்தி உள்ளார்.

இதற்கிடையில், மகளை காணாத பெற்றோர் பல்வேற இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இதை அறிந்த அவர்கள் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அப்போது, கணேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு தனியாக வசிக்கிறேன். அவருடன் வாழ போகிறேன் என்று மகள் கூறியுள்ளார். இதனையடுத்து, ராஜாஜி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடிபெயர்ந்தனர். 

இதன் பின்னர் காதல் மனைவி என்றும் பாராமல் கணேஷ் மிகவும் வக்கிரமாக நடந்து கொண்டு செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளார். 17 வயது இளம்பெண் ஒருவரை வீட்டுக்கே அழைத்து வந்து மனைவி கண் எதிரே உல்லாசமாக இருந்துள்ளார். தனது நண்பர்களையும் வீட்டுக்கு அழைத்துச் சென்று மனைவிக்கு கூட்டு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார்.

கணவரின் செக்ஸ் தொல்லை எல்லை மீறி போனதால் அவரது பிடியில் இருந்து தப்பி வந்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் கணவரான கணேஷ் மீது இளம்பெண் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். எனது பெற்றோரின் சம்மதம் இன்றி திருமணம் செய்து கொண்டேன். நான் அணிந்திருந்த 1½ சவரன் செயின், ½ சவரன் மோதிரத்தை அடகு வைத்து முன் பணம் செலுத்தி கடந்த 23-ம் தேதி அன்று வில்லிவாக்கம் ராஜேஷ் நகரில் வாடகைக்கு குடியேறினோம். அன்று இரவே எனக்கு துணையாகவும் வீட்டு வேலைக்கு உதவி செய்வதற்காகவும் என்று கூறி அயனாவரம், மங்களாபுரம் பகுதியில் வசித்து வரும் 17 வயது பெண்ணை தோழி என்று எனக்கு அறிமுகப்படுத்தி அவரையும் அதே வீட்டில் தங்க வைத்தார்.

 

ஓரிரு நாட்களிலேயே எனக்கு அவர்கள் இருவரும் நடந்து கொண்ட விதத்தை கண்டு சந்தேகம் ஏற்பட்டு நான் எனது கணவரிடம் கேட்டபோது எங்கள் இருவர் இடையே வாக்குவாதம் முற்றி அவர் என்னை அடித்து உதைத்தார். ஆபாச வார்த்தைகளால் திட்டியும் என்னை இது சம்மந்தமாக இனி எதுவும் கேட்கக்கூடாது. மீறி கேட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி வீட்டில் இருந்த அறைக்குள் வைத்து பூட்டி சென்றார். எனது இரு கைகளை கட்டியும், வாயை துணியால் அடைத்தும் பலமுறை செக்ஸ் சித்ரவதை செய்தார். இச்சம்பவத்தால் எனக்கு உடல் ரீதியாக பாதிப்பும் காயமும் ஏற்பட்டது. ஆகவே நான் எனது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கதறி அழுதேன். அப்போது என்னிடம் சமாதானம் பேசுவது போல் ஆசை வார்த்தை கூறி என்னை மது அருந்த கூறி வற்புறுத்தினார். அவரது வற்புறுத்தலின்பேரில் நான் மது அருந்திய பின் அவருடன் இருந்த பெண்ணும் என்னிடம் தவறான முறையில் பாலியல் தொல்லை கொடுத்தார்.

எனது கணவர் அவரது போனில் வீடியோ எடுத்து அதை அவரது நண்பர்களுக்கும் அனுப்பி வைத்தார். எனது கணவரின் நணபர்கள் என்று 4 பேர் (பார்த்தால் அடையாளம் காட்ட கூடிய சுமார் 23 வயதுடையோர்) வரவழைத்து என்னிடம் கூட்டு பாலியலில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்தினார். ஆனால் நான் கத்தி கூச்சலிட்டு அழுத காரணத்தினால் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டார்கள். அவர்கள் சென்ற சிறிது நேரத்திலேயே எனது கணவர் என்னை நிர்வாணப்படுத்தி கைகளை கட்டி போட்டு, வாயை துணியால் மூடி கடுமையாக சித்ரவதை செய்தார்.

நீ என்னுடைய 11-வது மனைவி. அது மட்டுமில்லாமல் என்னை படம் பிடித்தது போல் பல கல்யாணமான பெண்களின் அந்தரங்க வீடியோவை என்னிடம் காட்டி மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தினார். எனது வீட்டின் உரிமையாளரிடம் கூறியதினால் அவரது உதவியுடன் நான் அங்கிருந்து தப்பித்து எனது பெற்றோர் வீட்டுக்கு சென்று நடந்ததை கூறினேன். எனது கணவர் மற்றும் இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன். இதனையடுத்து, கணேஷ் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.