நீதாவுக்கும் அதே ஊரைச் சேர்ந்த தினேஷ் என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அது கள்ளக்காதலாக மாறி இருவரும் திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்தனர். இருவரும் பலமுறை தனிமையில் சந்தித்து உள்ளாசத்தில் ஈடுபட்டுவந்தனர்.
கணவன் இறந்த நிலையில் மனைவி வேறு ஒரு இளைஞருடன் உறவு வைத்திருந்த நிலையில் திடீரென அந்த பெண் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் அந்தப் பெண்ணின் மூன்று குழந்தைகளும் தந்தையையும் இன்றி தாயும் இன்றி பரிதவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க காவல்துறையும், அரசும் எத்தனையோ நடவடிக்கைகள் எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. காதலிப்பதாக கூறி பெண்களை கற்பழித்து ஏமாற்றுவது, காதலிக்க மறுக்கும் பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசுவது, கள்ளக்காதலில் ஈடுபட்டு பெண்களை அடித்து கொலை செய்வது என பல்வேறு வகைகளில் தினந்தினம் குற்றங்கள் அரங்கேறி வருகிறது. இந்த வகையில் ஹரியான மாநிலத்தில் கேட்போரை பதைபதைக்க வைக்கும் கொடூர கொலை சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

எட்டு மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணின் கணவர் இறந்து விட்டார், கணவர் இறந்த பிறகு அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் அந்தப் பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி இருவரும் திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்தனர், பல ஆண்டுகளாக இது நீடித்தது, இவர்களின் விவகாரம் கிராம மக்களுக்கும் நன்கு தெரியும், ஒரு கட்டத்தில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர், அந்தப் பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். ஆனால் அந்த குழந்தைகளை தன்னுடனேயே வைத்துக் கொள்ளவேண்டும் என அந்தப் பெண் விரும்பினார், அதற்கு கள்ளக்காதலன் சம்மதிக்கவில்லை இதனால் அந்தப் பெண்ணுக்கும் கள்ளக்காதலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு விவகாரம் கொலையில் முடிந்துள்ளது. நடந்த சம்பவத்தை விவரமாக பார்க்கலாம்:- அரியானா மாநிலம் சோனிபட்டில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது, இது குறித்து போலிஸார் தெரிவிக்கையில், டெல்லி ஷாதிப்பூரில் வசித்த நீதா என்பவருக்கும், அரியானா மாநிலம் சோனிபட்டில் வசித்த சுந்தர் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் ஆத்மார்த்தமாக நேசித்தனர், மிகவும் பரஸ்பரமாக இருந்தனர்,அத்தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். வாழ்க்கை மிக மகிழ்ச்சியாகவே சென்றது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக சுந்தர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். கணவன் இறந்தபின் குழந்தைகளுடன் அத்தி நகரில் இருந்த நீதாவுக்கும் அதே ஊரைச் சேர்ந்த தினேஷ் என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அது கள்ளக்காதலாக மாறி இருவரும் திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்தனர். இருவரும் பலமுறை தனிமையில் சந்தித்து உள்ளாசத்தில் ஈடுபட்டுவந்தனர். அவர்கள் இருவருக்கும் தொடர்பு இருப்பது இரண்டு வீட்டாருக்கும் தெரியும், இவர்கள் விவகாரத்தை அந்த ஊர் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் அறிந்திருந்தனர். இதனை அடுத்து தினேஷ்குமாரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என நீதா வற்புறுத்தினார். அதனை அடுத்து தினேஷ்க்கும் நீதாவுக்கும் திருமணம் நடந்தது, பிள்ளைகளை தாய் வீட்டில் விட்டுவிட்டு கணவனுடன் வந்தார் நீதா, இருவரும் ஆறு மாத காலம் ஒன்றாக வசித்தனர், மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். அதைனையடுத்து நீதா, தினேஷ்க்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தால்.

குழந்தைகளை அழைத்து வந்து தன்னுடனே வைத்துக் கொள்ள நீதா விரும்பினார், ஆனால் அதை கணவன் ஏற்கவில்லை இதுதொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, மேலும் குழந்தைகளை அழைத்து வந்தால் கொலை செய்து விடுவேன் என்று தினேஷ் மிரட்டினார். அதோடு நிற்காமல் வரதட்சணை கேட்டு அந்தப் பெண்ணை கொடுமை செய்தார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் கைகலப்பாக மாறி கொடூரமாக கல்லால் தாக்கி நீதா கொலை செய்யப்பட்டார். மனைவியை அடித்துக் கொன்ற தினேஷ் ஊருக்கு வெளியே பந்தேறி சாலையில் வீசி சென்றார், பின்னர் சாலையில் பெண் சடலமாக கிடப்பதை கண்டு பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து பார்த்தபோது நீதா இறந்து கிடந்தார். நீதாவை திருமணம் செய்து கொண்டு, அவருடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு, அந்தப் பெண்ணை தினேஷ் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தினேஷை கொலை வழக்கில் கைது செய்தனர். அதனை எடுத்து நீதாவின் உடலை பரிசோதனைக்காக கோஹானாவில்உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

அதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கணவன் இறந்த நிலையில் மூன்று குழந்தைகளின் தாய் தவறான உறவின் காரணமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், தற்போது 3 குழந்தைகளும் தாயை இழந்து தந்தையும் இழந்து பரிதவிக்கும் கோர சம்பவம் நேர்ந்துள்ளது. இது அப்பகுதி மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
