Asianet News Tamil

அந்த இடத்தில் தொட்டதுமே பத்திக்கிச்சு.. உல்லாசத்திற்காக கணவரை போட்டு தள்ளிய மனைவி.. பகீர் வாக்குமூலம்.!

நான் வேலை பார்த்த அழகு நிலையம் அருகில்தான், மணிகண்டனின் டெய்லர் கடை இருந்தது. அவரிடம் ஜாக்கெட் தைக்க கொடுப்பேன். ஜாக்கெட்டுக்கு அளவு எடுப்பது போல, என்னை தொடக்கூடாத இடங்களில் எல்லாம் தொடுவார். அதில் இருந்து நாங்கள் காதலிக்க தொடங்கினோம்.

illegal affair... Husband murder case.. wife arrested
Author
Chennai, First Published Jun 22, 2021, 12:22 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால்  கணவரை பால்கனிக்கு தனியாக அழைத்துச் சென்று தூக்கத்திலேயே அவரை தீர்த்துக்கட்டி விட்டோம் என மனைவி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

சென்னை சைதாப்பேட்டை, ஜெயராமன் தெருவில் வசித்தவர் கோதண்டபாணி (36). இவர் வீடுகளுக்கு உள்அலங்காரம் செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி நிரோஷா (30). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் முன்னதாக கோடம்பாக்கத்தில் வசித்து வந்தபோது அப்பகுதியைச் சேர்ந்த டெய்லர் மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் இல்லாத நேரத்தில் வீட்டில் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்தது. இதனால், இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. 

பின்னர், உறவினர்கள் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதைடுத்து கோடம்பாக்கத்தில் இருந்து சைதாப்பேட்டைக்கு வீடு வாடகை எடுத்து வசித்து வந்தனர். ஆனாலும்,  நிரோஷா-மணிகண்டன் உடனான கள்ளக்காதல் தொடர்ந்து வந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். கள்ளக்காதல் தொடர்வதை அறிந்த கோதண்டபாணி கடும் கோபம் அடைந்து இருவரையும் எச்சரித்தார். 

இந்நிலையில் கடந்த 18-ம் தேதி இரவு கோதண்டபாணி வீட்டில் தூங்கியபோது அரிவாளால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்டு மனைவி அதிர்ச்சியடைந்தார். உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கோதண்டபாணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர்.

அப்போது, மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசார் சந்தேகமடைந்தனர். இதனையடுத்து, போலீசார்பாணியில் விசாரணை நடத்தியதில் கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக மனைவி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் எனது கணவர் மாதத்தில் 15 நாட்கள் வேலை இல்லாமல் வீட்டில் சும்மா இருப்பார். வேலைக்கு போனால்தான் சம்பளம். அவர் சம்பாத்தியம் குடும்பம் நடத்த போதவில்லை. இதனால் அழகு நிலையம் ஒன்றில் நானும் வேலை பார்த்தேன்.

நான் வேலை பார்த்த அழகு நிலையம் அருகில்தான், மணிகண்டனின் டெய்லர் கடை இருந்தது. அவரிடம் ஜாக்கெட் தைக்க கொடுப்பேன். ஜாக்கெட்டுக்கு அளவு எடுப்பது போல, என்னை தொடக்கூடாத இடங்களில் எல்லாம் தொடுவார். அதில் இருந்து நாங்கள் காதலிக்க தொடங்கினோம். அவருக்கு நல்ல வருமானம் வந்தது. அதை என்னிடம் கொடுப்பார். அவரோடு ரகசியமாக சேர்ந்து வாழ முடிவு செய்து, வாழ்ந்தேன். அவருக்கு திருமணம் ஆகி விட்டதாக வெளியில் பொய் சொன்னார். ஆனால் அவருக்கு திருமணம் ஆகவில்லை.

காதல் விவகாரம் வெளியில் தெரிந்து எனது கணவர் நெருக்கடி கொடுத்தார். எனவே அவரை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டோம். திட்டப்படி எனது கணவரை பால்கனிக்கு தனியாக அழைத்துச் சென்று படுக்கவைத்தேன். நானும் அவரோடு படுத்து கொண்டேன். மணிகண்டன் வந்ததும் செல்போனில் கூப்பிட்டார். உடனே கதவை நான்தான் திறந்து விட்டேன். தூக்கத்திலேயே அவரை தீர்த்துக்கட்டி விட்டோம். மணிகண்டனை தப்பிக்க விட்டு, விட்டு நான் நாடக மாடினேன். ஆனால் போலீசார் உண்மையை கண்டுபிடித்து விட்டனர் என்றார். இதனையத்து, மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள மணிகண்டனை தேடி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios