ஆத்திரமடைந்த சொப்னபிரியா தனது கள்ளக்காதலன் மணிகண்டனுக்கு இரவு 11 மணியளவில் போன் செய்துள்ளார். அதில் என்னை கொலை செய்து வீடு அல்லது எனது கணவரை கொன்று விடு என ஆவேசமாக பேசியுள்ளார்.

கள்ளக்காதலை கைவிடும்படி தொடர்ந்து தகராறு செய்த கணவனை செல்போன் சார்ஜர் ஓயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலம் சித்தூர் ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்தவர் வாசு(49). மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சொப்னபிரியா (45). கடந்த 19ஆம் தேதி நெஞ்சுவலியால் வாசு உயிரிழந்துவிட்டதாக சொப்னபிரியா தனது மாமியாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு ஆம்புலன்ஸ் மூலம் வாசுவின் சடலத்தை அவரது சொந்த ஊரான அரிகவாரிபள்ளி கிராமத்திற்கு எடுத்துச் சென்றார். அங்கு வாசுவின் சடலத்தை பார்த்து கதறிய தாய் தன் மகன் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக கூறினார்.

இதனையடுத்து, வாசுவின் தாய் சந்திரகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மனைவி சொப்னபிரியா பதற்றம் அடைந்துள்ளார். தொடர்ந்து சொப்னபிரியாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கொலை தொடர்பாக போலீசார் கூறுகையில்;- சொப்னபிரியாவிற்கும் அப்பகுதியை சேர்ந்த மணிகண்டன்(35) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்ததையடுத்து மனைவியை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால், சொப்னபிரியா தனது கள்ளக்காதலை கைவிடாமல் தொடர்ந்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த 19ஆம் தேதி பணிக்கு சென்ற காசு மாலை வீடு திரும்பும் போது குடிபோதையில் வந்துள்ளார். அப்போது கணவன் மனைவி இடையே கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சொப்னபிரியா தனது கள்ளக்காதலன் மணிகண்டனுக்கு இரவு 11 மணியளவில் போன் செய்துள்ளார். அதில் என்னை கொலை செய்து வீடு அல்லது எனது கணவரை கொன்று விடு என ஆவேசமாக பேசியுள்ளார்.

 இதையடுத்து, மணிகண்டன் நள்ளிரவு வாசு வீட்டுக்கு விரைந்து வந்துள்ளார். அங்கு குடிபோதையில் தூங்கி கொண்டிருந்த வாசுவின் கழுத்தில் செல்போன் சார்ஜர் ஓயரால் இறுக்கியுள்ளார். அதில், வாசு மூச்சுத்திணறி உயிரிழந்தார். பின்னர் சொப்னபிரியா தனது மாமியாருக்கு போன் செய்து நெஞ்சுவலியால் வாசு இறந்துவிட்டதாக கூறி நாடகமாடியுள்ளார் என்று போலீசார் கூறினர். இதையடுத்து, சொப்னபிரியாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.