கள்ளத்தொடர்பால் ஆட்டோ ஓட்டுநர் சரமாரியாக வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் ரகு (24) ஆட்டோ ஓட்டுநர். இவரது நண்பர் ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக் மயிலாப்பூரை சேர்ந்தவர். ரகு வீட்டுக்கு அடிக்கடி கார்த்தி வந்து செல்வார். இதனால், ரகுவின் மனைவி வினோதியுடன்(21) பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன் வினோதினியை அழைத்துக்கொண்டு தனது வீட்டில் ஒரு வாரம் தங்க வைத்ததாக கூறப்படுகிறது. மனைவி காணாததால் பல இடங்களில் தேடினார் ரகு. அப்போதுதான் கார்த்திக் வீட்டில் இருந்து தெரியவந்தது. உடனே அவரை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். இதனால், ரகு வினோதினி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

 அதற்குப் பிறகும் ரகு வீட்டில் இல்லாத நேரத்தில் அடிக்கடி கார்த்தி வந்து சென்றார். இது ரகுவுக்கு தெரியவர ஆத்திரமடைந்தார். மனைவியை திட்டினார். கார்த்திக்கையும் கடுமையாக எச்சரித்தார். ஆனால், தொடர்பை நிறுத்தியபாடில்லை நீடித்தது. இதனால் ஆத்திரமடைந்த ரகு கார்த்திக்கை கொலை செய்ய திட்டமிட்டார். 

இந்நிலையில், நேற்றிரவு கண்ணகி நகருக்கு கார்த்திக் வந்தார். இது ரகுவுக்கு தெரியவர நண்பர்கள் 4 பேருடன் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஆட்டோவில் விரைந்தனர். ரகுவின் வீடு அருகே காரத்திக் நின்றிருப்பதை பார்த்தனர். உடனே வேகமாக சென்று கார்த்திக்கை சரமாரி அரிவாளால் வெட்டினர். ரத்த வெள்ளத்தில் பயங்கர அலறல் சத்தத்துடன் கார்த்திக் கீழே சாய்ந்தார். சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

 இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே போலீசாருக்கு தகவல் தெரித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து தீனா, ஜெயராஜ் இருவரை கைது செய்துள்ளனர்.தப்பியோடிய ரகு உள்ளிட்ட 2 பேரை தேடி வருகின்றனர்.