Asianet News TamilAsianet News Tamil

என் மகளை கொன்ற அந்த பையனை பார்க்கணும்... தாய் கண்ணீர் விட்டு கதறல்!!

என் மகளை கொன்ற வினோத்தை நான் பாக்கணும்..  என மகளை பறிகொடுத்த தாய் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.
 

I Want to meet killer Vinoth
Author
Chennai, First Published Jun 30, 2019, 4:25 PM IST

என் மகளை கொன்ற வினோத்தை நான் பாக்கணும்..  என மகளை பறிகொடுத்த தாய் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்  பகுதியை சேர்ந்த கருப்பசாமிக்கு வினோத் , கனகராஜ் , கார்த்திக் என்ற மூன்று மகன்கள் இருந்தனர். இதில் கனகராஜ், வெள்ளிப் பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தலித் சாதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால்,இவர்களுடைய காதல் இருவீட்டாருக்கும் தெரியவந்தது. இந்த காதலுக்கு கனகராஜின் தந்தை கருப்பசாமி மற்றும் சகோதரர்கள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு கனகராஜ் தனது காதலியை கல்யாணம் செய்துகொண்டு, அதே பகுதியில் ஒரு வாடகை வீட்டுக்கு சென்று விட்டார். இந்த விஷயம் தெரிந்த கனகராஜின் அண்ணன் வினோத் நேற்று முன்தினம் மாலை 5.20 மணியளவில் வினோத், கனகராஜின் வீட்டுக்கு சென்றார். அப்போது அண்ணன்-தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரம் அடைந்த வினோத் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் கனகராஜை சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் அவர் அலறித்துடித்தார். அவரது சத்தம் கேட்டு காதலி ஓடி வந்து தடுக்க முயன்றார். இதனால் அந்த இளம் பெண்ணின் தலை மற்றும் முகத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். அதன்பிறகும் ஆத்திரம் அடங்காத வினோத், கனகராஜை அரிவாளால் வெட்டினார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

உடனே வினோத் அந்த வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து கனகராஜின் காதலியை மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிகிச்சைப் பலனின்றி பலியானார்.

இந்த ஆணவ படுகொலை கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இக்கொலை தொடர்பாக கனகராஜ் அண்ணன் வினோத்தை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர்.  ஆனால் இக்கொலையில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அய்யப்பன், கந்தவேல், சின்ராஜ் ஆகியோர் உடந்தையாக செயல்பட்டுள்ளனர். அவர்களையும் கைது செய்ய வேண்டும் என வர்ஷினி பிரியா உறவினர்கள் குற்றம் சாட்டினார்கள். மேலும் அந்த 3 பேரையும் கைது செய்தால் தான் வர்ஷினி பிரியா உடலை வாங்குவோம் என கூறி கோவை அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தினார்கள். 

அப்போது பேசிய பெண்ணின் தாய் அமுதா, என் மகளை கொன்ற, அந்த பையன் வினோத்தை நான் பாக்கணும்.. ஏன் என் மகளை வெட்டினேன்னு நான் கேக்கணும். இவங்களுக்கு தூக்கு தண்டனை இல்லேன்னாலும் பரவாயில்லை... ஆயுசு முழுக்க ஜெயில்லயே இருக்கணும்  என்று குமுறி அழுதுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios