Asianet News TamilAsianet News Tamil

நான் யாரையும் மிரட்டி வீடியோ எடுக்கல.. அப்படினா? ஆபாச பாதிரியாரின் பகீர் வாக்குமூலம்..!

 கடந்த சில நாட்களுக்கு பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ, இளம்பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ மற்றும் போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தலைமறைவானார். 

I did not take the video to threaten anyone... church priest Benedict Anto confession
Author
First Published Mar 21, 2023, 3:12 PM IST

பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட  ஆபாச பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ போலீசாரிடம் பல்வேறு அதிர்ச்சி வாக்குமூலத்தை அளித்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் பாதிரியர் பெனடிக்ட் ஆன்றோ (29). அப்பகுதியில் உள்ள தேவாயலம் ஒன்றில் பாதிரியாராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ, இளம்பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ மற்றும் போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தலைமறைவானார். 

I did not take the video to threaten anyone... church priest Benedict Anto confession

இந்நிலையில், பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பாலியல் ரீதியாக வாட்ஸ் அப் சாட்டிங் செய்து தொல்லை செய்ததாகவும், மிரட்டியதாகவும் புகார் அளித்தார். இதன் பேரில் பாதிரியார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த பாதிரியாரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று பெனடிக்ட் ஆன்றோ கைது செய்யப்பட்டார். 

I did not take the video to threaten anyone... church priest Benedict Anto confession

அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பெனடிக்ட் ஆன்றோ பல்வேறு அதிர்ச்சி தகவல் தெரிவித்தார். அதில், லேப்டாப்பில் இருந்த பெண்களின் புகைப்படங்கள், வீடியோவை நான் வெளியிடவில்லை. நான் யாரையும் மிரட்டியும் வீடியோ எடுக்கவில்லை. அவர்களுக்கு தெரியாமல், அவர்கள் விரும்பாமல் எதையும் நான் செய்ததில்லை என கூறி உள்ளார். வீடியோவில் இருந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும் தெரிவித்தார். இதனையடுத்து, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் பெனடிக்ட் ஆன்றோவுக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்ட பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. 

Follow Us:
Download App:
  • android
  • ios