தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட வழக்கில் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில், பெண் மருத்துவர் வாயில் மதுவை ஊற்றி கொடுமைப்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஐதராபாத்தைச் சேர்ந்த கால்நடை அரசு பெண் மருத்துவர், கடந்த புதன்கிழமை பணி முடிந்து இரவு வீட்டுக்குத் திரும்பியபோது, இருசக்கர வாகனத்தின் டயர் பஞ்சரானது. இதனால், பதற்றத்துடன் நடுரோட்டில் தவித்துக்கொண்டிருந்த அவருக்கு லாரி ஓட்டுநரும் கிளினரும் உதவி செய்ய முன் வந்துள்ளனர். பின்னர், அவர்கள் மீது சந்தேகம் அடைந்த அந்த பெண், தன் தங்கையிடம் செல்போனில் பேசியுள்ளார். அப்பெண்ணின் தங்கை அருகிலுள்ள டோல்கேட்டுக்குச் சென்று பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

சில நிமிடங்கள் கழித்து அக்காவை தொடர்பு கொள்ள முயன்ற போது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, அந்த பெண்ணை பலாத்காரம் செய்து 27 கி.மீ. தொலைவில் உள்ள பாலத்தின் அடியில் தீயிட்டு எரித்து கொன்றுள்ளனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. 

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுளர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், 4 பேரில் ஒருவன் பெண்ணின்  இருசக்கர வாகனத்தை பஞ்சர் ஆக்கியுள்ளான். இரவு 9.15 மணிக்கு வீட்டிற்கு புறப்படும் போது பஞ்சர் ஆனதை உணர்ந்த பெண்ணிடம் உதவுவதாக 4 பேரும் முன் வந்துள்ளனர். இதனையடுத்து, அவர்கள் மதுபோதையில் இருந்ததால் சந்தேகமடைந்த பெண், தன் தங்கையிடம் தகவல் தெரிவித்துள்ளார். 

இதனை அறிந்த கும்பல் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக புதருக்குள் தூக்கிச் சென்று போனை சுவிட்ச் ஆப் தூக்கி எரிந்துள்ளனர். பெண் சத்தம்போட்டதால் அவர் வாயில் மதுவை ஊற்றி உள்ளனர். இதனையடுத்து, மயக்க நிலையில் சென்றதால் 4 பேரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர். இவளை உயிரோடு விட்டால் நடந்தவற்றை வெளியில் சொல்லிவிடுவால் என்பதால் லாரியில் ஏற்றிக்கொண்டு 27 கி.மீ., தொலைவில் உள்ள பாலத்தின் அடியில் நள்ளிரவில் வைத்து எரித்து கொன்றதாக தெரிவித்துள்ளனர்.