விருந்து முடித்துக் கொண்டு வெளியே வந்தபோது சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல்  சொகுசு காரில்  கடத்தினர். 2 மணி நேரம் சாலைகளில் சுற்றியபடி அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு இறக்கிவிட்டு சென்றனர்.

ஐதராபாத்தில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் பிரபல மதுபாரான பப் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த மே 28ம் தேதி 17 வயதுடைய சிறுமி நண்பர் ஒருவரின் விருந்துக்கு சென்றார். விருந்து முடித்துக் கொண்டு வெளியே வந்தபோது சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் சொகுசு காரில் கடத்தினர். 2 மணி நேரம் சாலைகளில் சுற்றியபடி அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு இறக்கிவிட்டு சென்றனர். 

இதனையடுத்து, சிறுமி நடந்த சம்பவத்தை கூறி தந்தையிடம் கதறி அழுதுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் இளம் பெண்ணை மருத்துவ பரிசோதனை செய்ததில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது. மேலும் பெண் அளித்த தகவல்படி சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். 

அதன்படி, 5 சிறுவர்கள் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதில் மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (எம்ஐஎம்) கட்சியை சேர்ந்த எம்எல்ஏவின் மகனுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க;- புகார் கொடுக்க சென்ற 25 வயது பழங்குடியின பெண்ணை புரட்டி எடுத்து நாசம் செய்த 59 வயது எஸ்.ஐ..!