முதல் திருமணத்தை மறைத்து சரோஜாவை அனில்குமார் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு தன் தாய் வீட்டிற்கு சரோஜா சென்று விட்டார்.
காதல் மனைவியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி உடலை டிரம்மில் அடைத்து தலைமறைவான கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள எஸ்பிஆர் ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் அனில்குமார். கடந்த 2020-ம் ஆண்டு இவரது மனைவி உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். இதனையடுத்து, 6 மாதங்களுக்கு முன்பு சரோஜா என்பவரை 2வதாக காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், முதல் திருமணத்தை மறைத்து சரோஜாவை அனில்குமார் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு தன் தாய் வீட்டிற்கு சரோஜா சென்று விட்டார். ஒரு மாதத்திற்கு முன் மீண்டும் தன் கணவன் வீட்டிற்கு சரோஜா வந்துள்ளார். ஆனால் இரண்டு பேருக்கும் இடையே பிரச்சனைகள் முடியவில்லை. இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெற்றோர் மகளிடம் பேசுவதற்காக போன் செய்த போது எடுக்கவில்லை. அதற்கு அடுத்தடுத்து 2 நாட்களாக போன் செய்தும் சரோஜா எடுக்காததால் அனில்குமாருக்கு போன் செய்துள்ளார். அவரும் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த சரோஜாவின் குடும்பத்தார், அனில்குமார் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீடு பூட்டிக் கிடந்தது.

இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து அனில்குமார் வீட்டின் கதவை போலீசார் உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தண்ணீர் டிரம்மில் சரோஜா துண்டு துண்டாக வெட்டப்பட்டு கடலம் அழுகிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை பார்த்த சரோஜாவின் பெற்றோர் கதறி அழுது துடித்தனர். உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோததனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததனர். மேலும், தலைமறைவாக உள்ள கணவர்அனில்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
