ஐதராபாத்தில் இருந்து சட்டவிரோதமாக வாங்கி வளர்த்த இரு பெண் குழந்தைகளை சேடபட்டி அருகே போலீசார் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரை மாவட்டம், சேடபட்டி அருகிலுள்ள குப்பல் நத்தம் கிராமத்தைச்  சேர்ந்த தம்பதி காசிவிசுவநாதன் மதுவதி. இவர்களூக்கு திருமணம் ஆகி 13 ஆண்டாகியும் குழந்தை இல்லை. கடந்த ஒன்றை  ஆண்டுக்கு முன், ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் பணிபுரியும் குப்பள் நத்தம் பகுதியைச் சேர்ந்த சிலர்  மூலமாக பிறந்து 26 நாளே ஆன பெண் குழந்தையை  ஐதராபாத்தில் பகுதியில் வாங்கி வந்து வளர்த்தனர். இதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் தனலட்சுமி தம்பதியருக்கும் 25 ஆண்டாக குழந்தையின்றி, ஐதரா பாத்தில் இருந்து பிறந்து 5 நாளே ஆன பெண் குழந்தையை 3 மாதத்துக்கு முன்பு வாங்கி வந்து வளர்த்து வருகிறார்கள்.   இது பற்றி மதுரை மாவட்ட  குழந்தைகள் நலக் குழுவுக்கு தகவல் கிடைத்தது.  விசாரித்த போது, முறையாக குழந்தையை தத்தெடுக்காமல், சட்ட விரோதமாக ஐதராபாத்தில் இருந்து வாங்கி வந்து வளர்ப்பதும் தெரிய வந்தது.
 பெண் குழந்தைகளை குறி வைத்து ஒரு கும்பல் கடத்தி விற்பனை செய்து வருவது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மதுரையில் காணாமல் போன குழந்தைகளை இவர்கள் ஐதராபாத்துக்கு கடத்தியிருக்கலாமா என்கிற கோணத்தில் விசாரணை செய்து வருகிறார்கள்.

TBalamurukan