டெல்லியில் உள்ள  கீதா காலனியில் வசிப்பவர் அதுல் அகர்வால். இவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், ’’எனது கணவர் பாலியல் வன்கொடுமைக்கு தன்னை ஆளாக்கினார்.  அவருடைய நண்பர்களுடன் என்னை கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வில் ஈடுபடுத்தினார். இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட கட்டாயப்படுத்தி மிரட்டினார்.

 

கடந்த ஜனவரி மாதம், எனது  கணவரான அகர்வாலின் அனுமதியுடன் அவரின் நண்பர்களான சஞ்சய் கௌசிக் மற்றும் புஷ்பேந்திர மிஸ்ரா ஆகிய இரு நண்பர்கள் தன்னை பாலியல் வன்புணர்வு செய்து கொடுமை படுத்தினார்.  அவருடைய நண்பர்கள் வன்புணர்வு செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். பின் வீட்டிற்கு வந்த கணவர், என்னை இயற்கைக்கு மாறான முறையில் பலாத்காரமாக உடலுறவு கொண்டார். 

இந்த விவகாரத்தை  வெளியில் சொல்லாமல் இருக்க வேண்டும். இல்லையேல் என்னை இயற்கைக்கு மாறான முறையில் உடலுறவில் ஈடுபடுத்தியதை வீடியோவில் பதிவு செய்துள்ளதாகவும், அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி வருகிறார்’’ என அந்தப்புகாரில் அவர் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் அந்த பெண்ணின் கணவர் அகர்வால் மற்றும் அவரின் நண்பர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.