மனைவியின் தங்கையை கடத்தி  சென்று பாலியியல் தொல்லை கொடுத்த அக்கா கணவனை போலாசார்  கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது கொளத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஆசை எண்ணத்தில் மனைவியின் தங்கை அதாவது  மச்சினிச்சியை கையை பிடித்து இழுத்து முத்தம் கொடுத்து பாலியியல் தொல்லை கொடுத்த  நபரை  ஆவடி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். 

கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன், (44 ) திவ்யா தம்பதியர்,  சரவணன் ஒரு கூலி தொழிலாளி. இவர் சில நாட்களுக்கு முன் திருமுல்லைவாயலில்  வசிக்கும் தன் மனைவியில் 19 வயதான இளைய சகோதரியை 'தனியாக பேச வேண்டும்' என அழைத்துள்ளார். அக்காள் கணவர்தானே ஏதாவது முக்கியமான தகவலாக  இருக்கும் என நம்பி' அந்தபெண்  ரயிலில் கொளத்தூருக்கு வந்துள்ளார். அப்போது இருவரும் சேர்ந்து  கொளத்தூரில் இருந்து மின்சார ரயில் மூலம் கடற்கரை நிலையம் நோக்கி சென்றனர்.  

அப்போது சரவணன் தனது மச்சினிச்சியை (அனு பெயர் மாற்றப்பட்டுள்ளது) கையை பிடித்து இழுத்து அருகில் அமர வைத்ததுடன் அவருக்கு முத்தம் கொடுக்க முயன்றதுடன் அவருடன் தவறாக நடக்க முயன்றுள்ளார். அப்போது  அக்காள் கணவர் வித்தியாசமாக  நடந்துகொள்வதை கண்டு அதிர்ச்சியடைந்த அனு,   அங்கிருந்து தப்பியச் சென்று  பெற்றோர் உதவியுடன் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில்  மகளிர் போலீசார் நேற்று சரவணனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.