கணவன் வேறு பெண்ணோடு உறவு வைத்துக்கொள்வது, மனைவி கணவனுக்கு தெரிந்தே கள்ளக்காதலனோடு ஓடிவிடுவது, கணவனுக்கு தெரியாமல் வேறொருவரோடு குழந்தை பெற்றுக்கொள்வது, உடல் சுகத்துக்காகவும், பணத்துக்காகவும் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் அரங்கேறும் நிலையில், தனது மனைவி குழந்தை பெற்றுக்கொண்டு நல்லா சந்தோஷமா வாழனும் என்பதற்காக, கணவன் தற்கொலை செய்துகொண்டு வீடியோ எடுத்து வைத்த சம்பவம் பார்ப்பவர்களையும் கண்கலங்க வைத்துள்ளது.

குழந்தை இல்லாத ஏக்கத்தில் தனியார் நிறுவன மேலாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு முன்பாக வேறு திருமணம் செய்து கொள்ளுமாறு தனது மனைவிக்கு அவர் தனது செல்போனில் வீடியோ  எடுத்து வைத்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை திருமுல்லைவாயலை அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் ராஜ் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு ஐ.டி. கம்பெனியில் மேனேஜராக வேலைபார்த்து வருகிறார். இவருடைய மனைவி மோகனப் பிரியாவும் என்ஜினீயராக தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக மோகனப் பிரியா கர்ப்பமடைந்துள்ளார் ஆனால், என்ன ஆனதோ? சில நாட்களில் அந்த கருவும் கலைந்து விட்டது. இதனால் கணவன் மனைவி இருவரும் பெரும் பெரும் துயரத்தில் குமுறிக்கொண்டிருந்தனர்.

திருமணம் ஆகி ஆண்டுகள் சில கடந்த பின்னும் தங்களுக்கு குழந்தை இல்லாததால் மனம் உடைந்த ராஜ், நேற்று காலையில் வீட்டில் தனது மனைவி இல்லாத நேரத்தில் ஃபேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்றிருந்த மோகனப்பிரியா வீட்டுக்கு வந்தபோது தனது கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அலறித் துடித்தார்.  

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருமுல்லைவாயல் போலீசார் ராஜின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பின்னர் இது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது தற்கொலைக்கு முன்னதாக ராஜ்   மொபைல் போனில் தனது மனைவிக்காக ஒரு வீடியோவை பதிவு செய்து உள்ளது. 

அதில், உன்னை நான் ரொம்ப லவ் பண்றேன் மோகனா, ஐ மிஸ் யூ மோகனா, எனக்கு வாழவே பிடிக்கவில்லை மோகனா. என்னால் நீ ரொம்ப கஷ்டப்படுற. நானிறந்துவிட்டேன் என்பதற்காக நீ தற்கொலை செய்து கொள்ள வேண்டாம். தயவுசெய்து நீ வேற கல்யாணம் பண்ணிக்கோ. உனக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கணும். நீ குழந்தையை பெற்று நல்லா வாழணும். உன்னை நெனைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு என கூறி இருந்தார். இந்த வீடியோவை பார்த்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி துடித்தது பார்த்த போலீசாரையும் உருகவைத்தது.