பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தை சேர்ந்தவர் மணி என்கிற குண்டு மணி . பைனான்சியரான  இவருக்கும் குள்ளக்காபாளையத்தை சேர்ந்த டிரைவர் குணசேகரன் என்பவரது மனைவி மணிமேகலைக்கும் இடையே கடந்த 6 மாதங்களாக கள்ளக்காதல் இருந்து வந்தது.

இதனை அறிந்த குணசேகரன் தனது மனைவியை கண்டித்தார். ஆனால், இதனை பொருட்படுத்தாமல் மணிமேகலை கள்ளக்காதலை தொடர்ந்ததால் கணவனும், மனைவியும் சமீபத்தில் பிரிந்தனர். இதன் பின் மணிமேகலை புளியம்பட்டியில் கலைஞர் நகரில் ஒரு வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் கலைஞர் நகர் வீட்டில் மணிமேகலையும், மணியும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை கண்டு ஆத்திரம் அடைந்த குணசேகரன் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் மணியை குத்தி கொலை செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.

இதையடுத்து குணசேகரனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார்.

தனது மனைவி மணிமேகலை பைனான்சியர்  மணியிடம் வட்டிக்கு ரூ.50 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். இதனை வசூலிக்க மணி வரும்போது இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு உள்ளது. இதனை அறிந்த நான் எனது மனைவியை கண்டித்து புத்திமதி கூறினேன். மேலும், இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க 3 முறை வீடு மாற்றி விட்டேன். இருப்பினும், அவர்கள் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் தொடர்ந்ததால் நான் என் மனைவியிடம் இருவரும் பிரிந்து விடுவோம் என கூறினேன். அவளும் சரி என கூறி விட்டாள்.

இதையடுத்து, சமீபகாலமாக நாங்கள் பிரிந்து இருந்தோம். இந்த நிலையில், மணிமேகலை தன்னுடைய படிப்பு சான்றிதழ்களை கேட்டாள். அதனை கொடுக்க சம்பவத்தன்று இரவு 9.30 மணியளவில் நான் அங்கு சென்றபோது எனது மனைவியும், மணியும் வீட்டை உள்புறமாக பூட்டி உல்லாசமாக இருந்தனர்.

மணியால் எனது குடும்பம் சீரழிந்ததை கண்டு மனம் நொந்த நான் அவரை ஆத்திரத்தில் ஆவேசமாக கழுத்து உள்பட 3 இடங்களில் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பினேன் என தெரிவித்தார்.