ச்சீ.. நண்பன் என நம்பி வீட்டில் விட்டால்.. மனைவியை கரெக்ட் செய்து உல்லாசம்.. இறுதியில் நடந்த பயங்கரம்..!
விஜயகுமார் தமிழரசுவை தனது வீட்டிற்கு அடிக்கடி அழைத்துச் செல்வார். அப்போது தமிழரசுவுக்கும், வனிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. விஜயகுமார் கடைக்கு சென்ற நேரத்தில் வீட்டுக்கு சென்று வனிதாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
உல்லாசத்திற்கு தடையாக இருந்த கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த நகரி ராமாபுரத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (37). இவரது மனைவி வனிதா (30). இவர்கள் இருவரும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். விஜயகுமார் நகரியில் செல்போன் கடை நடத்தி வந்தார். அப்போது அவரது கடைக்கு வந்த தமிழரசு (20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகி வந்தனர்.
இந்நிலையில், விஜயகுமார் தமிழரசுவை தனது வீட்டிற்கு அடிக்கடி அழைத்துச் செல்வார். அப்போது தமிழரசுவுக்கும், வனிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. விஜயகுமார் கடைக்கு சென்ற நேரத்தில் வீட்டுக்கு சென்று வனிதாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த விவகாரம் நாளடைவில் கணவர் விஜயகுமாருக்கு தெரியவந்ததையடுத்து மனைவி வனிதாவை கண்டித்துள்ளார். இதனால், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் விஜயகுமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு ராமாபுரம் அருகே உள்ள கல்குவாரிக்கு விஜயகுமாரை வனிதா அழைத்து சென்றார். அங்கு காத்திருந்த தமிழரசு, நாகராஜ், சந்தோஷ் குமார் ஆகியோர் சேர்ந்து விஜயகுமாரை கல்குவாரி குட்டைக்குள் தள்ளிவிட்டனர். ஆனாலும், விஜயகுமார் கல்குவாரி குட்டையில் இருந்து நீச்சல் அடித்து கொண்டு கரைக்கு வர முயற்சித்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வனிதா அவரது தலையில் கல்லை தூக்கி கொலை செய்துள்ளார். பின்னர், தனது கணவரை காணவில்லை என நகரி காவல் நிலையத்தில் வனிதா புகார் செய்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக மனைவியிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதனையடுத்து, வனிதாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை மனைவி வனிதா ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் வனிதா அவரது கள்ளக்காதலன் தமிழரசு மற்றும் நாகராஜ், சந்தோஷ்குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.