சென்னை மயிலாப்பூர் பல்லக்கு மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவர் மீது மயிலாப்பூர் காவல் நிலையத்தில் அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் நேற்று பிற்பகலில் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றின் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 2 பேர் தினேஷை வழிமறித்து ஓட ஓட விரட்டி அரிவாளல் வெட்டினர்.

அவர்களிடம் இருந்த தப்பிக்க முயன்ற தினேஷை விடாமல் விரட்டிச் சென்று வெட்டிச் சாய்த்தனர். பட்டப் பகலில் இந்த சம்பவம் அரங்கேறியதால் சாலையில் சென்று கொண்டிருந்த பயணிகள் அலறி அடித்து ஓடினர். இதையடுத்து அந்த 2 பேரும் ஆட்டோவில் அங்கிருந்த தப்பிச் சென்றனர்.

இது குறித்த தகவலறிந்த மயிலாப்பூர் போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தினேஷை ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்ந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி  தினேஷ் உயிரிழந்தார்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரனையில், அப்பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் மனையியுடன் தினேஷ் கள்ளத் தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்ததது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்ணிக் கணவர்  தனது நண்பர் நாகமணியுடன் சேர்ந்து தினேஷை வெட்டியது தெரிய வந்ததது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.